காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பாஜக கட்சிகள் நேரடியாக 4 தொகுதிகளில் எதிர்த்து நிற்கின்றன. அந்த தொகுதிகள் என்னென்ன? தொகுதியின் நிலவரம் என்ன? வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக உள்ளது? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது.

தேசிய அரசியலில் காங்கிரஸ் - பாஜக எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இப்போது இரு கட்சிகளும் தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் திமுக - அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
4 தொகுதிகளில் நேரடி போட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2021 சட்டசபை ஒப்பிடும்போது 3 தொகுதிகள் அதிகமாகும். அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவிற்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது 7 தொகுதிகள் அதிகமாகும்.
இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பாஜக கட்சிகள் நேரடியாக 4 தொகுதிகளில் மோத உள்ளன. அந்த தொகுதிகள் என்னனென்ன? யார் எம்எல்ஏவாக உள்ளனர்? இந்த தேர்தலில் வெல்ல அதிக வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஊட்டி
இதில் முதலில் நாம் பார்க்கும் தொகுதி ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் இந்த தொகுதி உள்ளது. 15 தேர்தல்களில் இந்த தொகுதியில் 10 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சுவதந்திரா கட்சி ஒருமுறையும், திமுக, அதிமுக கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
18 தொகுதிகளில் நேரடியாக மோதும் பாஜக.
கடந்த 2016, 2021ம் ஆண்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் வெற்றி பெற்றார். தற்போது அவர் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த முறை 65,530 ஓட்டுகள் வாங்கிய நிலையில் பாஜக வேட்பாளர் போஜராஜன் 60,182 வாக்குகள் வாங்கினார். இதனால் காங்கிரஸின் கணேஷ் 5,348 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் இந்த முறை இந்த தேர்தலில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி இருக்கும்.
அறந்தாங்கி
அடுத்ததாக நாம் பார்க்கும் தொகுதி அறந்தாங்கி. இந்த தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இங்கு சி்ட்டிங் எம்எல்ஏவாக ராமச்சந்திரன் உள்ளார். கடந்த 2021 தேர்தலில் ராமச்சந்திரன் 81,835 வாக்குகள் வாங்கி அதிமுக வேட்பாளர் ராஜநாயகமை (பெற்ற வாக்குகள் 50,942) 30,893 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.
இந்த முறை பாஜக - காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்கலாம். இங்கு பாஜகவுக்கு கட்டமைப்பு இல்லை என கூறப்படுவதால் காங்கிரஸே மீண்டும் வெல்லலாம் என்று சொல்லப்படுகிறது.
குளச்சல்
இந்த வரிசையில் 3வது பார்க்கும் தொகுதி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. கடந்த 2006, 2011, 2016, 2021 என தொடர்ந்து 4 தேர்தல்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. இதில் 2011, 2016, 2021ல் பிரின்ஸ் வெற்றி பெற்றார். தற்போது அவர்தான் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார்.
2021 தேர்தலில் பிரின்ஸ் 90,681 வாக்குகள் பெற்று வாகை சூடினார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜகவின் ரமேஷ் 65,849 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இதனால் பிரின்ஸ் 24,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இதனால் பாஜகவை விட மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கி இருக்க வாய்ப்புள்ளது.
விளவங்கோடு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. 20011, 2016, 2021ல் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தார். இதனால் கடந்த 2024ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்வர்ட் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தான் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார்.
அந்த தேர்தலில் தாரகை கத்வர்ட் 91054 ஓட்டுகள் வாங்கிய நிலையில் அவரை எதிர்த்து விஜயதாரணி போட்டியிடவில்லை. பாஜக சார்பில் நந்தினி களமிறங்கினார். அவர் 50,880 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இதனால் தாரகை கத்வர்ட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் பாஜகவில் மீண்டும் விஜயதாரணி போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் இந்த தொகுதியில் வெல்வது யார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications