காங்கிரஸ் கேட்ட சீட்.. லோக்சபா வேண்டாம்.. ராஜ்ய சபாவிற்கு போகும் டி. ஆர் பாலு? திமுக மாஸ்டர்பிளான்
சென்னை: திமுக மக்களவை எம்பி டி. ஆர் பாலுவை மாநிலங்களவை எம்பியாக ஆக்க திமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டி ஆர் பாலு தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் மக்களவை எம்.பி.யாக உள்ளார், 1996 முதல் சென்னை தெற்கு மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 ஆம் ஆண்டு முதல் அக்கட்சியில் இருந்து வரும் அவர் திமுக கட்சியின் மக்களவை தலைவராக இருக்கிறார்.

தற்போது திமுக பொருளாளராகவும் உள்ளார், செப்டம்பர் 3, 2020 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக ஆகஸ்ட் 2018 முதல் ஜனவரி 2020 வரை திமுக கட்சியின் முதன்மை செயலாளராக பணியாற்றினார் .
டி ஆர் பாலு: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியான டி ஆர் பாலு, இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் எம்பி தொகுதியை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்த கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில்தான் டி. ஆர் பாலுவை மாநிலங்களவை எம்பியாக ஆக்க திமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எம்பி பின்னணி ; டி ஆர் பாலு முதன்முதலில் 1986 இல் ராஜ்யசபா உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின் மக்களவைக்கு டி ஆர் பாலு 1996 இல் சென்னை தெற்கு தொகுதியில் தேர்வானார். இதன் பின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை அமைச்சரானார். அவரது பதவிக்காலத்தின் முடிவில், அவர் அப்போதைய மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களின் அமைச்சகத்தின் (தற்போது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் என்று அழைக்கப்படுகிறது) கூடுதல் பொறுப்பையும் வகித்தார்.
அதன்பின் டி ஆர் பாலு 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அதே தொகுதியில் இருந்தும், 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்தும் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலு 1999 முதல் டிசம்பர் 2003 வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2004 முதல் 2009 வரை கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சராகவும் பணியாற்றினார்.
காங்கிரஸ் கேட்கும் சீட்: இந்த நிலையில்தான் ஸ்ரீபெரும்புதூர் எம்பி தொகுதியை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்த கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில்தான் டி. ஆர் பாலுவை மாநிலங்களவை எம்பியாக ஆக்க திமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5-7 இடங்கள்தான் கொடுப்போம்.. உங்கள் கட்சியில் தேர்வாக உள்ளவர்களின் லிஸ்டை தயார் செய்யுங்கள் என்று தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தெரிவிக்க உள்ளதாம். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதியை கேட்டு வருகிறதாம். இந்த நிலையில்தான் டிஆர் பாலு அந்த தொகுதியில் களமிறங்க சான்ஸ் குறைவு என்கிறார்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications