ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா? கேஎஸ் அழகிரி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி விரைவில் முடிவை அறிவிப்பதாக அறிவித்தார்.

இதன்படி ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பரில் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினி டுவிட்டரில் இன்று அறிவித்தார்.

ரஜினிகாந்த் ட்வீட்

ரஜினிகாந்த் ட்வீட்

அவர் தனது ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்!!!" என்று கூறியுள்ளார்.

உயிர் போனாலும்

உயிர் போனாலும்

அதன் பின்னர செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினி, "2017 டிசம்பர் 31 அன்று சட்டமன்றத்தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பித்து மக்களை சந்தித்து போட்டியிடுவேன் என்று கூறினேன், ஆனால், அதை என்னால் செய்ய முடியவில்லை. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மக்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், மருத்துவர்கள் கொரோனா தொற்றால் வெளியே செல்வது ஆபத்து என்றார்கள். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. சந்தோஷம்தான். அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன். கொடுத்த வாக்கில் தவறமாட்டேன். தற்போது அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்டாயம்.

மாத்துவோம்

மாத்துவோம்

நான் ஏற்கெனவே உயிருக்கு போராடியபோது தமிழக மக்கள் செய்த பிரார்த்தனையால் உயிர் பிழைத்து வந்தேன். நான் வெற்றி பெற்றாலும் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் மக்களின் தோல்வி. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்

கேஎஸ் அழகிரி

கேஎஸ் அழகிரி

காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், "ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது. திமுகவுடன் ஏற்கெனவே கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும். ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது. ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம். முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+