தென் மாநிலமே காங்கிரஸ் கோட்டைதான்.. திமுகவை கழற்றிவிட திட்டம்? விஜயுடன் இணைய ராகுலுக்கு நெருக்கடி?
சென்னை: தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று காங்கிரஸ் டெல்லி தலைவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கோரிக்கைகளை விடுத்து உள்ளார்களாம். இது தொடர்பாக காங்கிரஸ் ராகுல் காந்திக்கு அவர்கள் நெருக்கடியை கொடுத்து வருகிறார்களாம்.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக முக்கியமான பார்முலா ஒன்று அவர் சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் + 100 இடங்களில் தவெக போட்டியிடும் காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருக்கும். கேரளாவில் 10 இடங்கள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். புதுச்சேரியில் 5- 10 தொகுதிகள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். இதற்காக விஜய் தீவிரமாக காங்கிரசின் டெல்லி தலைகள் உடன் பேசி வருகிறாராம்.
பிரவீன் சக்ரவர்த்தி உடன் சந்திப்பு
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தினார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையயடுத்து இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்துள்ள போஸ்டில், இந்திய அரசியல் கட்சிகள், தங்கள் தலைவர்களின் பேரணிகளுக்குப் பெரும் கூட்டத்தைக் கூட்ட கணிசமான நேரம், பணம் மற்றும் உழைப்பைச் செலவிட்டு வருகின்றன. ஆனால், தமிழ்க்க வெற்றி கழகத்தின் நிலைமை இதற்கு நேர் எதிரானது. தங்கள் பேரணிகளில் அதிக மக்கள் கூடுவதால், கூட்டத்தைக் குறைப்பதே அவர்களுக்குள்ள சவாலாக உள்ளது, இது பலருக்கும் வியப்பளிக்கிறது என்று விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தை பாராட்டுவது போல பேசி இருந்தார்.
டெல்லிக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்
விஜயின் இந்த திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் நம்புகிறார்களாம். தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று காங்கிரஸ் டெல்லி தலைவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கோரிக்கைகளை விடுத்து உள்ளார்களாம். இது தொடர்பாக காங்கிரஸ் ராகுல் காந்திக்கு அவர்கள் நெருக்கடியை கொடுத்து வருகிறார்களாம்.
ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் சிலர் கொடுக்கும் நெருக்கடியில் பின்வரும் விஷயங்களை டெல்லியிடம் கூறுகிறார்களாம்,
1. திமுகவினர் நம்மை பண்ணையார் கட்சி என்கிறார்கள்.. ஆனால் அவர்கள்தான் பண்ணையார் கட்சி. நம்முடைய தயவில் வென்றுவிட்டு ஆட்சியில் பங்குதார மறுக்கிறார்கள்.
2. வேறு போஸ்டிங் எதுவும் கூட நமக்கு கிடைப்பது இல்லை.
3. கட்சியும் மாநில அளவில் வளராமல் இருக்கிறது. இதற்கு ஒரே வழி விஜயுடன் கூட்டணி வைப்பதே.
4. தவெக நமக்கு ஆட்சியில் பங்கு தரும். இதன் மூலம் அமைச்சர் பதவிகள் வரும். அதோடு கட்சியும் வலிமை அடையும்.
5. கேரளாவிலும், புதுச்சேரியிலும் விஜய் மூலம் ஆட்சியை பிடிக்கலாம். ஸ்டாலினுடன் இருந்தால் அதை சேட்டை முடியாது.
6. ஏற்கனவே நாம் தெலுங்கானா, கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிறோம். விஜயுடன் இணைந்து கேரளா, புதுச்சேரி, தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தால்.. தென் இந்தியாவே நம்முடைய கோட்டையாக மாறும். என்று கூறி ராகுல் காந்திக்கு கடுமையான நெருக்கடியை தமிழக காங்கிரஸ் கட்சியினர் சிலர் கொடுத்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications