வீட்டுக்கடன் வாங்க போறீங்களா.. கொங்கு பார்முலா தெரியுமா? உடனே பாருங்க
சென்னை: வீட்டுக்கடன் வாங்க வேண்டும் என ஆசையில் உள்ளீர்களா, தாராளமாக வாங்கலாம். ஆனால் சிலர் வீட்டுக்கடனை ஆசைப்பட்டு வாங்கி அவஸ்தையில் சிக்கி கொள்ளாதீர்கள்.. யாரெல்லாம் வீட்டுக்கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டியவர்கள் என்பதை பார்ப்போம்.
கல்யாணத்தை முடிச்சுப்பாரு, வீட்டை கட்டிப்பாரு என்று சொல்வார்கள்.. இன்றைக்கு இரண்டுமே எளிதான விஷயம் இல்லை. ஒரு பக்கம் பெண் கிடைப்பது கடினம் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளதால், குறைவான சம்பளம் வாங்குவோர் பெண் தேடி அலையும் நிலை அதிகமாக உள்ளது.

சரி அதை விடுங்கள் அந்த டாப்பிக் பற்றி இன்னொரு முறை பார்ப்போம். இப்போது பார்க்க போது, இரண்டாவது விஷயம்.அதாங்க வீடு கட்டுவது.. வீடு கட்ட வேண்டும் என்றால், ரொக்க பணத்தில் வீடு கட்டுவது என்பது இன்றைய சூழலில் பலராலும் நினைத்து பார்க்கவே முடியாது. வீடு கட்ட கண்டிப்பாக கடன் வாங்க வேண்டும்.
வீட்டுக்கடன் என்பது எல்லாருக்குமே கிடைத்துவிடாது.. அப்படியே கிடைத்தாலும், நிலையான வருமானம் அல்லது ஊதியதம் 30 வருடங்களுக்கோ அல்லது 20 வருடங்களுக்கோ இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. நல்ல நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் வேலை உறுதி என்ற நிலை தற்போது குறைந்துவிட்டது. 50 ஆயிரம் சம்பளம் வாங்கினால் தான் திருமணமே சென்னையில் செய்ய முடியும் என்கிற நிலை, இன்றை பொருளாதார சூழலில் இருப்பதாக பல பொருளாதார நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த சூழலில் வீடு கட்ட கடன் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு சம்பளம் தேவைப்படும் என்பதை யோசித்து பாருங்கள். வீட்டுக்கடன் யாரெல்லாம் வாங்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறிய தகவல்களை பார்ப்போம். பொதுவாக வீட்டுக்கடனை மத்திய அரசு அல்லது மாநில அரசு வேலையில் இருப்பவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்வோர், பெரிய வங்கிகளில் நிரந்த வேலையில் பணியாற்றுவோர் தாராளமாக வாங்கலாம். அதேபோல் லட்சங்களில் சம்பளம் வாங்கியபடி ஐடி துறையில் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வோர் தாராளமாக முயற்சிக்கலாம்.
ஆனால் 60 ஆயிரம் அல்லது அதற்கு கீழ் சம்பளம் வாங்கியபடி தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் வங்கியில் கடன் வாங்குவதற்கு ஒருமுறைக்கு பல முறை யோசிக்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஏனெனில் அவர்களால் அந்த சம்பளத்தில் குடும்பம் நடத்தி, பிள்ளைகளின் கல்வி செலவு, மாத சேமிப்பு, கார், பைக் அல்லது வீடு உபயோக பொருட்கள் வாங்கியதற்கான இஎம்ஐ இருக்கும். இந்த சூழலில் நகைகளை வைத்து வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு,பின்னர் வீட்டிற்கு வங்கியில் கடன் வாங்கினால், அவர்கள் நகையையும் மீட்க முடியாமல், வங்கி கடனையும் அடைக்க முடியாமல் தடுமாறுவார்கள்.
இதை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். வேலை உறுதியாக 20 வருடம் அல்லது 15 வருடம் இருக்கும், இப்போது வாங்கும் ஊதியம் அப்படியே தொடரும் என்ற நிலை இருந்தால் மட்டுமே வீட்டுக்கடன் வாங்குவதற்காக ரிஸ்க் எடுக்கலாம் என்றும் வேலைக்கு உத்தரவாதம் இல்லை என்றால் கண்டிப்பாக யோசிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
நம்மூரை பொறுத்தவரை ஆடம்பரமாக வீடு கட்டினால் மட்டுமே மதிப்பார்கள் என்று நினைத்து பலரும் வீடு கட்டி விடுகிறார்கள். ஆனால் வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் விழுந்து விடுகிறார்கள். இப்படி மற்றவர்களுக்காக வீட்டினை ஆடம்பரமாக கட்டுவதை விட, கொங்கு பார்முலாவை பயன்படுத்தலாம்.
கொங்கு பகுதிகளில் கடந்த 20, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம், அவ்வளவு சீக்கரத்தில் வீடு கட்டி கடனில் விழ பலரும் விரும்ப மாட்டார்கள். கொங்கு பகுதியில் பலருக்கும் நெசவு தான் தொழில். தறி பட்டறைகள் அதிக அளவில் இருக்கும். அவர்கள் கையில் கொஞ்சம் காசு சேர்ந்தால் தறி வாங்கி, அதில் கடினமாக உழைப்பார்கள். அந்த தறிகளை வைத்து இன்னும் கூடுதலாக தறி வாங்குவார்கள். இப்படி வாங்கி வாங்கியே மிகப்பெரிய நிறுவனங்களை உருவாக்கினார்கள். இதே பார்முலாவே கொங்கு பகுதியில் உள்ள அனைத்து தொழில் நடத்துபவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் வீடுகள் பல இன்னும் ஓடு போட்டு தான் இருக்கும். தங்கள் தொழிலில் முதலீடு செய்து அதில் மேல வர பார்ப்பார்கள். அதில் வென்று அதில் பெரிய வெற்றியை அடைந்த பின்னரே, பெரிய வீட்டை பற்றி யோசிப்பார்கள். தொழில் மற்றும் கடின உழைப்பு மற்றும் சேமிப்பை பற்றி யோசித்ததால் தான் கொங்கு பகுதி இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
இப்படி அவர்கள் செய்ய முக்கிய காரணம்.. அதுபோல் கையில் உள்ள பணத்தை அசையா சொத்தில், அதுவும் குடியிருக்க போகும் வீட்டில் போய் முதலீடு செய்துவிட்டால், அதனால் எந்த லாபமும் இருக்காது. அதேநேரம் அந்த பணத்தை, தொழில் அல்லது பாதுகாப்பான முதலீடுகளில் போட்டு வைத்து வெற்றி பெற்று அதன் பிறகு வீடு கட்டலாம். அதற்கான நிறைய திட்டங்கள் உள்ளன. எனவே வேலைக்கு உத்தரவாதம் இல்லாதவர்கள், நிலையான வருமானம் இல்லாதவர்கள் இந்த வழியை பின்பற்றலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications