Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க காரணமான மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக தலைமையிலான கூட்டணிக்கு செல்வதற்கு காரணமே மத்திய அரசு பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என உறுதியாக சொல்ல முடியும்.

பொதுவாக சிறுபான்மையினர் வாக்குகள், இந்துக்களின் வாக்குகளை சமூகத்தில் பிரித்து இந்து வாக்கு வங்கியை அறுவடை செய்வது என்பது பாஜகவின் யுக்தி. இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்த எந்த வித ஆயுதத்தையும் பாஜக எடுக்க தயங்கியதும் இல்லை என்பது மண்டல் கமிஷன் காலம் தொடங்கி இன்று வரையிலான வரலாறு.

பாஜகவின் இந்த முயற்சி குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் தமிழகம், கேரளாவில் இம்மியளவு கூட இந்த முயற்சியால் பாஜக வெற்றி பெற முடியாமல் போயிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என மதங்களாக இருந்தாலும் எல்லோரும் ஒருதாய்வீட்டு பிள்ளைகளாக, மாமன் மச்சான்களாக பழகுகிற பக்குவப்பட்ட மண்ணாக இது இருந்து வருகிறது.

தமிழகத்தின் கள நிலவரம்

தமிழகத்தின் கள நிலவரம்

இஸ்லாமியருக்கு ஒரு பிரச்சனை என்றால் கிறிஸ்தவருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிற தன்மை தமிழகத்தில் வேர்பிடித்து நிற்கிறது. இதற்கு வெந்நீர் ஊற்றுகிற எந்த ஒரு முயற்சியும் எப்போதும் கை கூடியது இல்லை. இன்னொன்று தமிழகத்தில் பாஜக எதிர்ப்பை யார் வலிமையாக பேசுகிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த மண் வாக்குகளை அள்ளித்தந்தும் இருக்கிறது.

எப்போதும் பாஜக எதிர்ப்பு அலை

எப்போதும் பாஜக எதிர்ப்பு அலை

2014 லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் மோடிப் பேரலை வீசியது. ஆனால் மோடியா? லேடியா? என அன்று ஜெயலலிதா எகிறி அடித்த அடியில் வெற்றிக் கனி வீழ்ந்தது. 2019 லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பாஜகவை காட்டமாக எதிர்த்து களம் கண்டனது. இந்த முறை திமுகவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. இதுதான் தமிழக வாக்காளர்களின் மனநிலை. இப்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

பாஜகவின் தமிழக கணக்கு

பாஜகவின் தமிழக கணக்கு

சட்டசபை தேர்தலில் இஸ்லாமியர், கிறிஸ்தவர் என சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கலாம., அதில் ஆதாயம் அடைந்துவிடலாம் என்பது பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கணக்கு. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக செய்திருக்கும் காரியங்களால் இஸ்லாமியர்கள் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக அணிக்குப் போகத்தான் போகிறது.

பாஜகவின் நடவடிக்கைகள்

பாஜகவின் நடவடிக்கைகள்

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் முத்தலாக் தடை சட்டத்தை பாஜக கொண்டு வந்தது. இதனை தங்களது மத உரிமைகளில் பாஜக அரசு தலையிடுகிறது என்பதாகவே இஸ்லாமியர்கள் பார்க்கின்றனர். இதன்பின் 2019 ஆகஸ்ட் மாதம் என்.ஐ.ஏ.வில் திருத்தங்களை கொண்டு வந்து பாஜக அரசு. ஏற்கனவே ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் பல இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. திருத்தமும் சர்ச்சையானது.

370வது பிரிவு நீக்கம், சிஏஏ

370வது பிரிவு நீக்கம், சிஏஏ

தனிநபரையும் தீவிரவாதியாக முத்திரை குத்தும் சட்டவிரோத தடுப்பு சட்டத்தையும் பாஜக அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொண்டு வந்தது. அதே ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. 2019-ம் ஆண்டின் இறுதியில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம்.. இது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் வீதிக்கு கொண்டு வந்தது. தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கூட சி.ஏ.ஏ. எதிர்ப்பு கிளர்ச்சிகள் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதிமுக, பாஜக தவிர ஒட்டுமொத்த தமிழகமும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டங்களுக்கு துணை நின்றன.

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு

இப்படி கெட்டிப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் ஒருங்கிணைப்பு வாக்குகளில் ஓவைசி இறங்கினால் ஓட்டை விழலாம் என கருதிக் கொண்டிருந்தது பாஜக. ஆனால் ஓவைசியும் இப்போது திமுக அணியில் இணைந்துவிட்ட நிலையில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி இருப்பது மிகையானது அல்ல.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+