ரயிலை கவிழ்க்க திட்டமிட்டு சதி.. கவரைப்பேட்டை ரயில் விபத்து வழக்கில் புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு!
சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில், ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட்டு ஆகியவற்றை கழற்றியதே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இந்திய ரயில்வே சட்டத்தின் 150-வது பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று இரவு, நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். எனினும் உயிரிழப்பு ஏதுமில்லை.

விபத்து நடந்த இடத்தில்: விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ஸ்விட்ச் பாயின்ட் போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்ததும், இது வழக்கத்துக்கு மாறான முறையில் இருந்ததும் தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, ரயில் நிலைய அதிகாரி முனிபிரசாத் பாபு அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க 3 டிஎஸ்பி-க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்விட்ச் பாயிண்ட்: இதற்கிடையே, கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து பல துறை அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில், சம்பவ இடத்தை 4 மூத்த பொறியாளர்கள் உட்பட 7 அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து 12 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது.
ரயில் பாதையில் ஒரு முக்கியமான ஸ்விட்ச் பாயின்ட்டில் இருந்து நட்டுகள் மற்றும் போல்ட்கள் காணாமல் போய் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 40 பேரிடம் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நட்டு, போல்ட்டுகள் அகற்றம்: விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியானது. அதேநேரத்தில் கவரைப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டிந்தது தெரியவந்துள்ளது. நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் லூப் பாதையில் சென்று விபத்துக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. காரணம், பயிற்சி இல்லாதவர்கள் விரைவாக போல்ட், நட்டுகளை கழற்ற முடியாது என்பதால் தான். ரயில் விபத்து திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
3 நிமிட கேப்பில்: மேலும், பாக்மதி விரைவு ரயிலுக்கு முன்பாக சூலூர்பேட்டை வரை செல்லும் பயணிகள் ரயில் 3 நிமிடங்களுக்கு முன்பு சென்றுள்ளது. மூன்று நிமிட இடைவெளிக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை சுழற்ற முடியுமா என சோதனை செய்து பார்க்கப்பட்டது. தண்டவாள பராமரிப்பு பணிகளில் அனுபவம் பெற்றவர்கள் மூலம் போல்ட், நட்டுகளை கழற்றி பார்த்தபோது 11 நிமிடங்கள் ஆகியுள்ளன.
சூலூர்பேட்டை ரயில் சென்ற பிறகு மூன்று நிமிட இடைவெளிக்குள் போல்ட் நட்டுகளை முழுமையாக கழற்றி இருக்க வாய்ப்பில்லை. சிறு சிறு பகுதியாக கழற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சூலூர்பேட்டை ரயில் கடந்ததும் முழுமையாக கழற்றி விடும்போது தான் பாகமதி ரயில் விபத்தில் சிக்கி உள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது.
பயிற்சி பெற்றவராகத்தான் இருக்கவேண்டும்: தண்டவாளத்தின் போல்ட், நட்டுகளை முழுமையாக கழற்றிய பிறகுதான் பச்சை சிக்னலில் இருந்து சிக்னல் சிவப்புக்கு மாறுகிறது. ஒரு பகுதி போல்ட், நட்டை கழற்றும் பொழுது சிக்னல் மாறுவது இல்லை என்பது ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. எனவே ரயில்வே ஊழியர்களில் யாரோ ஒருவரோ, முன்னாள் ஊழியரோ, துறையில் பயிற்சி பெற்ற நபர்களோ செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய பிரிவு சேர்ப்பு: இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில், ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. லூப் லைன் சந்திப்பில் நட்டு, போல்ட்டை கழற்றியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதால், ஏற்கனவே 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே சட்டத்தின் 150-வது சட்டப்பிரிவிலும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராசிங் சுவிட்ச் பாயிண்ட் இயந்திரத்தில் இருந்த நட்டு, போல்ட்டை யாரோ திட்டமிட்டு கழற்றி இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சட்டப்பிரிவும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications