தீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ஐஏ தகவல்
Recommended Video
சென்னை: துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை பிடித்து விமானத்தில் ஏற்றி, இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது. இவர்கள் அனைவரையும் டெல்லியில் கைது செய்த என்ஐஏ, பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியது. இந்த 14 பேரையும் ஜுலை 25 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை துபாய் போலீசார் கடந்த வாரம் பிடித்தனர். இதையடுத்து இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு கடந்த வாரம் தனி விமானம் மூலம் அனுப்பிவைத்தது. துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த 14 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் (என்ஐஏ) கைது செய்தனர்.

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக கைது செய்யப்பட்ட 14 பேரும் தனி விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் இன்று சென்னை கொண்டுவரப்பட்டனர். அவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜுலை 25 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த 14 பேர் கொடுத்த தகவலின் பேரில் தான், நாகப்பட்டினத்தில் உள்ள அசன் அலி, ஆரிஸ் முகமது உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களையும் ஜூலை 25 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'அன்சருல்லா' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக டெல்லியில் இந்த 14 பேரும் கைது செய்யப்பட்டனர் என்றும் வெளிநாட்டில் இருந்து நிதிதிரட்டி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
14 தமிழர்களின் பெயர் மற்றும ஊர் விவரம் பின்வருமாறு:
1. முஹம்மது ஷேக் மொஹ்தீன் - மதுரை
2. அமமது அசாருதீன் - திருவாரூர்
3. தொஹ்பீக் அஹம்மது - சென்னை
4. முஹம்மது அக்சர் - தேனி
5. மொய்தீன் சீனி ஷாகுல் ஹமிது - கீழக்கரை
6. முஹம்மது இப்ராஹிம் - நாகப்பட்டிணம்
7. மீரான் கனி - தேனி
8. குலாம் நபி ஆசாத் - பெரம்பலூர்
9 . ரஃபி அஹம்மது - ராம் நாடு
10. முன்தாப்சீர் - ராம் நாடு
11. உமர் பாஃரூக் - தஞ்சை
12. பாஃரூக் - வழிநோக்கம்.
13. பைசல் ஷெரிஃப் - ராம் நாடு
14. முஹம்மது இப்ராஹிம் - திருநெல்வேலி.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications