தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கடந்த முறை தமிழ்நாட்டில் எத்தனை சதவிகிதம் வாக்குப்பதிவு இருந்தது.. இந்த முறை எவ்வளவு பதிவானது என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் உட்பட நாடு முழுக்க இருக்கும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

Constituency wise polling percentage comparison between 2019 and 2024 Lok Sabha elections

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த காலங்களில் வாக்கு சதவீதம் 70 முதல் 80 சதவீதம் என்ற அளவிலேயே இருந்துள்ளது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில் 73.02 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், கடந்த 2014இல் 73.74 சதவீத வாக்குகளும் கடந்த 2019இல் 72.47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது.. இந்த முறை எத்தனை சதவிகிதம் பதிவானது என்பது குறித்து பார்க்கலாம். திருவள்ளூர் தொகுதியில் கடந்த முறை 72.33% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த முறை மாலை 7 மணி வரை 72.09% வாக்குகள் மட்டுமே பதிவானது. 6 மணிக்கு மேலும் டோக்கன் வழங்கி சில இடங்களில் வாக்குப்பதிவு நடப்பதால் கடைசி வாக்குப்பதிவு சதவிகிதம் சற்று மாறலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்கள்: வட சென்னையில் 2019இல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 69.26% வாக்குகள் பதிவானது. அதேபோல தென் சென்னையில் 2019இல் 57.07% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 67.82% வாக்குகள் பதிவானது. மத்திய சென்னையில் கடந்த முறை 58.98% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 67.35% பதிவாகி உள்ளது. மற்ற தொகுதிகளின் விவரங்களை பார்க்கலாம்.

ஸ்ரீபெரும்புதூர் 2019இல் 62.44%, இப்போது 69.79%.. காஞ்சிபுரத்தில் 2019இல் 75.31%, இப்போது 72.99%.. அரக்கோணம் தொகுதியில் 2019இல் 78.65%, இப்போது 73.92%.. கிருஷ்ணகிரி தொகுதியில் 2019இல் 75.95%, இப்போது 72.96%... தருமபுரி தொகுதியில் 2019இல் 82.41% சதவிகிதம், இப்போது 75.44%, திருவண்ணாமலை தொகுதியில் 2019இல் 78.15%, இப்போது 73.35%.. ஆரணி தொகுதியில் 2019இல் 79.01% இப்போது 73.77% வாக்குகள் பதிவாகி உள்ளது.

அதேபோல விழுப்புரம் 2019இல் 78.66%, இப்போது 73.49%... கள்ளக்குறிச்சி தொகுதியில் 2019இல் 78.81%, இப்போது 75.67%... சேலம் தொகுதியில் 2019இல் 77.91%, இப்போது 73.55%.. நாமக்கல் தொகுதியில் 2019இல் 80.22%.. இப்போது 74.29%, ஈரோடு தொகுதியில் 2019இல் 73.11% இப்போது 71.42%, திருப்பூர் தொகுதியில் 2019இல் 73.21% இப்போது 72.02%, நீலகிரி தொகுதியில் 2019இல் 74.01% இப்போது 71.07%.. கோவை தொகுதியில் 2019இல் 63.86%, இப்போது 71.17%.. பொள்ளாச்சி தொகுதியில் 2019இல் 71.15%, இப்போது 72.22% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

திண்டுக்கல் தொகுதியில் 2019இல் 75.29% இப்போது 71.37%.. கரூர் தொகுதியில் 2019இல் 79.55% இப்போது 75.05%, திருச்சி தொகுதியில் 2019இல் 69.5% இப்போது 71.20%, பெரம்பலூர் தொகுதியில் 2019இல் 79.26% இப்போது 74.46%, கடலூர் தொகுதியில் 2019இல் 76.49% இப்போது 72.4%, சிதம்பரம் தொகுதியில் 2019இல் 77.98% இப்போது 74.87%, மயிலாடுதுறை தொகுதியில் 2019இல் 73.93% இப்போது 71.45%, நாகப்பட்டினம் தொகுதியில் 2019இல் 76.93% இப்போது 72.21%, தஞ்சாவூர் தொகுதியில் 2019இல் 72.55% இப்போது 69.82%, சிவகங்கை தொகுதியில் 2019இல் 69.9%, இப்போது 71.05% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதுரை தொகுதியில் 2019இல் 66.09% இப்போது 68.98%, தேனி தொகுதியில் 2019இல் 75.27% இப்போது 71.74%, விருதுநகர் தொகுதியில் 2019இல் 72.49% இப்போது 72.29%, ராமநாதபுரம் தொகுதியில் 2019இல் 68.4% இப்போது 71.05%, தூத்துக்குடி தொகுதியில் 2019இல் 69.48% இப்போது 70.93%, தென்காசி தொகுதியில் 2019இல் 71.43% இப்போது 71.06%, திருநெல்வேலி தொகுதியில் 2019இல் 67.22% இப்போது 70.46%, கன்னியாகுமரி தொகுதியில் 2019இல் 69.9% இப்போது 70.15% வாக்களித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+