கட்டிடம் உள்ளே போய்.. வெளியே வரும் மெட்ரோ.. அதுவும் 12 மாடி கட்டிடம்! சென்னையில் தொடங்கிய கட்டுமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமங்கலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மெட்ரோ கட்டம்-2 திட்டத்தின் கீழ் பல்வேறு மெட்ரோ நிலையங்களை CMRL கட்ட திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயிலோடு சில மாபெரும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் திருமங்கலத்தில் அமைய உள்ள மெட்ரோவிற்கான கட்டுமானம் தொடங்கி உள்ளது.

அங்கே 12 மாடி கட்டிடம் கட்டடப்பட உள்ளது. இதன் உள்ளே மெட்ரோ செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக டெண்டர் தேர்வாகிவிட்ட நிலையில் கட்டுமானம் நடந்து வருகிறது. கிரவுண்ட் கட்டுமானம் முடிந்த நிலையில் அடுத்த கட்டுமானம் நடந்து வருகிறது. இதில் 4வது மாடியில் மெட்ரோ நிலையம் அமைக்கப்பட உள்ளது.

metro metro chennai

சீனாவில் செயல்படும் மெட்ரோ நிலையங்கள் போல.. கட்டிடம் உள்ள மெட்ரோ செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக மெட்ரோ ரயில் செல்லும். அங்கு மெட்ரோ ரயில்கள் 12 மாடி கட்டிடத்தின் வழியாகச் சென்று மூன்றாவது மாடி நிலையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டிடத்திற்கான வடிவமைப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேஷன்களுடன் சேர்த்து இந்த கட்டிட மேம்பாடு செய்யப்படும் மற்ற இடங்களான கோயம்பேடு மற்றும் திருமயிலை ஆகியவை 12 மாடி கட்டிடத்தின் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 12 மாடி கட்டிடம் குடியிருப்பு அல்ல.. மாறாக மெட்ரோ பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன பிளான்: கட்டிடங்கள், மெட்ரோ நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஒன்றாகக் கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். மூன்று இடங்களில் நிலையங்கள் கட்டுவதற்கான செலவு கட்டம்-2 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டிற்காக, மாநில அரசிடம் நிதி கோருவோம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமங்கலத்தில், திருமங்கலம் மேம்பாலம் அருகே மூன்று வீடுகள் இருந்த 450 மீ நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ ரயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த நடைபாதையை உருவாக்க திட்டம் இருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியிருக்கும். அதனால் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ்முதல் தரமணி வரை) சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், 16.02.2023 அன்று தொடங்கியது. "காவிரி" மற்றும் "அடையாறு" என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.

இதில் "காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்து தற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. "அடையாறு" சுரங்கம் தோண்டும் இயந்திரம், 250 மீ. தொலைவில் நெருக்கமாகப் பின் தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும். இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை வந்தடையும்.

சென்னை மெட்ரோ: இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் டி.லி விங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்த்தனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் டி.லி விங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமானநிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரைமெட்ரோ இரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதில்இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+