தளபதி விஜய் நம்பர் இருக்கு.. போன் பண்ணவா? காக்கியிடம் சண்டை செய்த ’வடக்கு’ டிரைவர்! வீடியோவ பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு லஞ்சத்தை ஒழிப்பதற்கும் ஊழல் புகார் கொடுப்பதற்கும் சிறப்பு வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கண்டெய்னர் ஓட்டுனரிடம் பில் கேட்ட ஆர்டிஓவிடம், "எம்ப்டி கன்டெய்னருக்கு எதற்கு பில்? என்னிடம் தளபதி விஜய் போன் நம்பர் இருக்கிறது" என வட மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அரசு துறைகள் அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறைந்ததாக பொதுமக்கள் இடையே பேசப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் காண்ட்ராக்ட் சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் லஞ்சம் குறைந்து இருக்கிறது என்கின்றனர்.

இதற்கிடையே கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் விஜய், "பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். அதையும் மீறி அதிகாரிகள் கேட்டால் உங்கள் அண்ணன் விஜயின் ஆட்சி நடப்பதாக சொல்லுங்கள்" என பேசி இருந்தார்.

Vijay Video Social Media

லஞ்ச புகார்

இதற்கிடையே அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க சிறப்பு வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. தலைமைச் செயலர் சாய்குமார் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், துறை செயலர்களுக்கும், முதன்மை செயலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். அதில்," அனைத்து அரசுத் துறைகளின் இணையதளத்தில் இந்த வாட்ஸ்ஆப் எண் இடம் பெற வேண்டும். அரசு அலுவலகங்களில் வெளியில் தெளிவாக தெரியும் இடங்களில் அறிவிப்புப் பலகையில் இந்த விவரம் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்ற தகவலும் அதில் இடம்பெற வேண்டும்.

லஞ்ச ஒழிப்பு துறை

அதனுடன் லஞ்ச ஒழிப்பு துறையின் இணையதளத்தில் இணைப்பும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். " இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம், ஊழல் குறித்த புகார்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், எண்.293. எம்.கே.என். தெரு. ஆலந்தூர். சென்னை. 600016, 9144-22321090/22321085/22310989/22342142, 9498180936 (வாட்ஸ் அப்), பேக்ஸ்- 91-44-22321005,
மின்னஞ்சல்: [email protected]"

வாட்ஸ்ஆப் எண்

இந்த தகவல் ஆங்கிலத்திலும் தமிழிலும் இடம்பெறச் செய்யப்பட வேண்டும். பலகையைக் காட்சிப்படுத்துமாறு, ஆட்சியர், செயலாளர்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்கள் / வாரியங்கள் / கழகங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகள், துறைத் தலைவர்கள், கீழ்நிலை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனம் அல்லது நிறுவனங்கள், மேலே உள்ள செய்தியை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் இணையதளத்திற்கான இணைப்புடன் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என கூறப்படுகிறது.

கண்டெய்னர் டிரைவர்

இந்த நிலையில் கண்டெய்னர் ஓட்டுனரிடம் பில் கேட்ட ஆர்டிஓவிடம், "எம்ப்டி கன்டெய்னருக்கு எதற்கு பில்? என்னிடம் தளபதி விஜய் போன் நம்பர் இருக்கிறது" என வட மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் கண்டைனர் ஓட்டுனரிடம், கையில் பில்லிங் மிஷினுடன் காக்கி சட்டையில் இருக்கும் நபர் பில் வேண்டும் என கேட்கிறார். கன்டெய்னரில் லோடு இல்லாமல் எம்டியாக இருக்கும் போது எதற்கு பில் தர வேண்டும் என கேட்ட அந்த ஓட்டுனர் என்னிடம் தளபதி விஜயின் போன் நம்பர் இருக்கிறது எனக் கூறுகிறார்.

வைரல் வீடியோ

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் நெட்டிசன்கள் சில சந்தேகங்களையும் எழுப்புகின்றனர். காக்கி உடையில் இருக்கும் அந்த நபர் எந்த துறையைச் சேர்ந்தவர் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. காவல்துறையினர் காக்கி அல்லது கருப்பு நிற ஸ்ட்ராப் அணிவார்கள், வனத்துறையினர் பச்சை நிறத்திலும், ஆர்டிஓ ஆய்வாளர்கள் நீல நிறத்திலும் ஸ்ட்ராப் அணிவார்கள், ஆனால் தீயணைப்புத் துறையினர் மட்டுமே சிகப்பு வண்ணத்தில் ஸ்ட்ராப் அணிந்திருப்பார்கள். எனவே பில்லிங் மெஷின் உடன் இருக்கும் அந்த நபர் யார் என விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+