தேர்தல் பணிமனையாக மாறிய கன்டெய்னர்கள்... சினிமா பாணியை தேர்தலில் புகுத்தி அசத்தும் நடிகை குஷ்பு!
சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னை எல்.ஐ.சி. அருகே கன்டெய்னர்களை தனது தேர்தல் பணிமனையாக அமைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
4 கன்டெய்னர்களில் செயல்படும் தேர்தல் பணிமனையில் குளிர் சாதன வசதி, கழிவறை வசதி, தனியாக தொலைபேசி, இணையதள வசதி என சகல வசதிகளும் உள்ளன.
தேர்தல் பணிமனையின் முகப்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் என்ற பெயருடன் நடிகை குஷ்புவின் படமும் இடம்பெற்றுள்ளது.

ஓடியாடி வேலை பார்க்கும் அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் அனைத்தும் இரவு பகல் பாராமல் ஓடியாடி வேலை செய்து வருகின்றன. பிரசாரம், மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்தல் என மக்களை கவரும் நடவடிக்கைகளில் கட்சிகள் செயலாற்றி வருகின்றன.

குஷ்புவின் தேர்தல் பணிமனை
பொதுவாக தேர்தல் காலங்களில் ஆங்காங்கே தற்காலிக தேர்தல் பணிமனைகள் அமைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது வழக்கமாகும். அந்த வகையில் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு அமைத்துள்ள தேர்தல் பணிமனை அனைவரையும் கவர்ந்து வருகிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. அருகே தனது தற்காலிக தேர்தல் பணிமனையை அமைத்துள்ளார்.

கன்டெய்னர்கள்தான் தேர்தல் பணிமனை
சினிமாவில் சூட்டிங் இடைவெளி நேரங்களில் நடிகர், நடிகைகள் வேன் போன்ற சகல வசதிகள் கொண்ட வாகனத்தில்(கேரவன்) ஓய்வெடுப்பது வழக்கம். சினிமா நடிகையாக இருந்த குஷ்புவும் இதே போன்று தேர்தல் பணிமனை அமைத்து அசத்தியுள்ளார். அதாவது 4 கன்டெய்னர்கள்களை அப்படியே தேர்தல் பணிமனையாக மாற்றி உள்ளார் குஷ்பு. இந்த தேர்தல் பணிமனையின் முகப்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் என்ற பெயருடன் நடிகை குஷ்புவின் படமும் இடம்பெற்றுள்ளது.

சகல வசதிகளும் உள்ளன
இந்த 4 கன்டெய்னர்களிலும் குளிர் சாதன வசதி, கழிவறை வசதி, தனியாக தொலைபேசி, இணையதள வசதி என சகல வசதிகளும் உள்ளன. இதில் ஒரு கன்டெய்னரில் நடிகை குஷ்புவின் அலுவலகம் செயல்படுகிறது. மற்ற 3 கன்டெய்னர்களில் தொகுதி நிர்வாகிகளுக்கு தனித்தனி அறை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிமனை வளாகத்தில், பெரிய சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து கூட்டம் நடத்தும் வகையில் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சினிமா செட்டிங் பாணியில் தேர்தல் பணிமணிகளை அமைத்து அனைவரையும் கவர்ந்து விட்டார் குஷ்பு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications