சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர் விபத்துகள், தாக்குதல்களால் அதிமுக எம்பிக்களுக்கு அடி மேல் அடி.. கவலையில் நிர்வாகிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் அருகே விபத்தில் சிக்கிய அதிமுக எம்பி

    சென்னை: அதிமுகவில் சமீபகாலமாக வருந்தத்தக்கச் சம்பவங்கள் நடைபெறுவதால் கட்சி நிர்வாகிகள் கவலையில் உள்ளனர்.

    நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை அதிமுக சந்திக்கவுள்ளது. பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளுடன் 1 ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைத்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் பாமக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிமுகவுக்கு ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பலி

    பலி

    இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் முன் சீட்டில் அமர்ந்திருந்த எம்பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மோதல்

    மோதல்

    திருச்சி பயணிகள் நிழற்குடை அமைப்பதில் திமுக- அதிமுகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் திருச்சி எம்பி குமார் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதிக்கு உருட்டுக்கட்டைகளுடன் வந்த அதிமுகவினர், திமுக பகுதி செயலாளர் தர்மராஜனின் அலுவலத்தை அடித்து உடைத்தனர்.

    ஆஹா.. நேரமே சரியில்லை போலயே.. திருச்சி குமார் எம்பி கன்னத்தில் விழுந்த பளார்.. ஒரே அடிதடி!ஆஹா.. நேரமே சரியில்லை போலயே.. திருச்சி குமார் எம்பி கன்னத்தில் விழுந்த பளார்.. ஒரே அடிதடி!

    காயம்

    காயம்

    அது போல் சேலம் அருகே அயோத்தியாபட்டினம் நோக்கி கள்ளக்குறிச்சி எம்பி காமராஜ் இன்று தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னாம்பள்ளி அருகே கார் சென்ற போது டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்தார்.

    சேலம் அருகே விபத்தில் சிக்கிய அதிமுக எம்பி.. லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிசேலம் அருகே விபத்தில் சிக்கிய அதிமுக எம்பி.. லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

    அதிமுகவினர் கலக்கம்

    அதிமுகவினர் கலக்கம்

    அதிமுக எம்பி ராஜேந்திரன் திடீர் பலி, எம்பி குமார் மீது தாக்குதல், எம்பி காமராஜுக்கு காயம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. இது போன்று அடுத்தடுத்த அடி மேல் அடி விழுவதால் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    English summary
    Continuous tragedy happens for ADMK MP. Party Chief saddens over the issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X