Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைத்திலும் எடப்பாடி அரசியல்.. ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து கோதுமை வழங்கப்படுகிறது.. அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து கோதுமை வழங்கப்பட்டு வருகிறது என்றும் உண்மை நிலை புரியாமல் எல்லாவற்றிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களில் கோதுமை நுகர்வு 92% என பதிவாகியுள்ளது என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்த நிலையில் இதற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

continuous-wheat-supply-to-ration-shops-edappadi-does-politics-in-everything-minister-sakkarapan

கோதுமை ஒதுக்கீடு

இன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். மத்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை கோதுமை ஒதுக்கீடு மாதம், 8,576 டன் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டினை உயர்த்திட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 8,576 டன்னிலிருந்து 17,100.38 டன்னாக உயர்த்தப்பட்டுப் பொது மக்களுக்குத் தங்குதடையின்றி நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தங்கு தடையின்றி வழங்கப்படும்

தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக்கீட்டைப் பழைய அளவிற்கே குறைத்து மாதம், 8,576 டன் கோதுமை மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2025 மாதத்திற்கு 8722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங்களுக்கு நுகர்வின் அடிப்டையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் கோதுமையின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92 சதவீதம் எனப் பதிவாகி உள்ளது.

நவம்பர் மாதத்தில் 08.11.2025 வரை 63 சதவீதம் (5,386 டன்) கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யபட்டுள்ளது. இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் நாளுக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனாலும் 15.11.2025-க்குள் 100 சதவீதம் கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம் போல் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்.

எல்லாவற்றிலும் அரசியல் வேண்டாம்

நடப்புக் குறுவைப் பருவத்தில் 9/11/25 வரை 1923 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 13.48 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1.75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கடைசி ஆண்டில் இதே காலகட்டத்தில் 4.41 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

அவர் ஆட்சியில் பொது ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 1918 சன்ன ரகத்திற்கு ரூ.1958 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2500, சன்ன ரகத்திற்கு ரூ.2545 வழங்கப்பட்டு வருகிறது. ஆதலால் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+