தேர்வுக் குழு தலைவர், நீக்கம், கம்பேக், ராஜினாமா.. சர்ச்சை நாயகனான சேத்தன் சர்மா.. ஒரு ரீவைண்ட்!

தேர்வுக் குழு தலைவரான பின் சேத்தன் சர்மாவால் ஏற்பட்ட சர்ச்சைகள் பற்றி பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா. சேத்தன் சர்மா என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் நினைவுக்கு வருவது அவர் 1987ம் ஆண்டு உலகக்கோப்பையில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் நினைவுக்கு வரும்.

அதைவிட ரசிகர்கள் மனதில் அழியா நினைவாக இருப்பது, 1986ம் ஆண்டு ஷார்ஜா கோப்பையில் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் வீரர் மியான்தத்தை சிக்ஸர் அடிக்கவிட்டு பாகிஸ்தான் வென்றதுதான்.

இதன் பின்னர் கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதில், 2021 டி20 உலககோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை, 2022 டி20 உலக கோப்பை என அனைத்து தொடருக்கும் சேத்தன் சர்மா தலைமையிலான குழுவே, இந்திய அணியை தேர்வு செய்தது. ஆனால், இதில் ஒரு முறை கூட இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை.

சேத்தன் சர்மா மீதான குற்றச்சாட்டு

சேத்தன் சர்மா மீதான குற்றச்சாட்டு

அதேபோல் கேப்டன்களை மாற்றிய விவகாரத்தில் சேத்தன் சர்மா செயல்பட்ட விதம் சர்ச்சையை ஏற்டுத்தியது. விராட் கோலியிடம் தகவலை தெரிவிக்காமல், ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் ஒரே ஆண்டில் 7 கேப்டன்களை மாற்றியது, பும்ராவை உடல் தகுதி அல்லாமல் டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு விளையாட வைத்தது போன்ற பல விமர்சனங்களில் சேத்தன் சர்மா சிக்கினார்.

சேத்தன் சர்மா நீக்கம்

சேத்தன் சர்மா நீக்கம்

இதே போன்று விருத்திமான் சாஹாவை அணியிலிருந்து நீக்கிவிட்டு, ஓய்வு பெறுங்கள் என கூறியது, பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தராமல் இழுத்து அடித்தது என்று பல புகார்கள் சேத்தன் சர்மா மீது எழுந்துள்ளது . இதன் காரணமாக சேத்தன் சர்மா குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ அதிரடியாக நீக்கியது இதனைத் தொடர்ந்து புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு சுமார் 600 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் பிசிசிஐயின் ஆலோசனை குழு 11 பேரை தேர்வு செய்து நேர்முகத் தேர்வு நடத்தியது.

ஸ்டிங் ஆபரேஷன்

ஸ்டிங் ஆபரேஷன்

இதில் சுமார் 2 வாரத்திற்கு பிறகு தற்போது சேத்தன் சர்மாவையே மீண்டும் பிசிசிஐ தேதர்வுக்குழு தலைவராக நியமிக்க, ஆலோசனை குழு முடிவு எடுத்தது. இதனைத் தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு செயல்பட்டு வந்த நிலையில், ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஊடகம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா ஏராளமான தகவல்களை உளறினார்.

சர்ச்சை நாயகன் சேத்தன் சர்மா

சர்ச்சை நாயகன் சேத்தன் சர்மா

பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி - விராட் கோலி இடையிலான மோதல், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோரின் காயம், இந்திய வீரர்கள் ஊசி எடுத்துக் கொள்வது உள்ளிட்ட பேச்சுகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சேத்தன் சர்மா மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தேர்வுக் குழு தலைவர் ஒருவர் அதிகமுறை சர்ச்சையது சிக்கியது இதுவே முதல்முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+