இந்தி மொழி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு..திமுக எம்பி செந்தில்குமாரை கடுமையாக கண்டித்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி மொழி மாநிலங்கள் திமுக எம்பி செந்தில் குமார் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திமுக எம்பி செந்தில் குமாரை முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார்.

கடந்த மாதத்தில் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி கிடைத்தது. இதனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது.

 Controversy about Hindi language states, Stalin strongly condemned DMK MP Senthilkumar

3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட மாநிலங்களில் பாஜகவின் மவுசு குறையமால் இருப்பதையே நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு காட்டுவதாக பாஜக ஆதரவாளர்கள் பேசிவருவதைக் காண முடிகிறது. இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி செந்தில் குமார், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுகிறது என்று பேசினார்.

சர்ச்சை பேச்சு: மேலும், இந்தி பேசும் மாநிலங்களை மாட்டு மூத்திரங்கள் (Gau Mutra) என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செந்தில்குமார் பேசுகையில், "இந்தி பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் வெல்வதுதான் பாஜகவின் பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவாக கவ் மூத்ரா என்று சொல்வோம்" என்றார். செந்தில் குமாரின் இந்த பேச்சு சர்ச்சையாக வெடித்தது. அவருடைய பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன.

மன்னிப்பு கேட்டார்: மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் இந்தி பேசும் மாநிலங்களை அவமதிக்கிறார்கள் என்றும், பாஜகவுகு எதிராக பலரும் இந்தி பேசும் மாநிலங்களை மதவெறியர்கள், படிப்பறிவற்றவர்கள், பாசிஸ்டுகள் என விமர்சிக்கிறார்கள் என்றும் பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.

இதனையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் செந்தில் குமார். இது தொடர்பாக திமுக எம்பி செந்தில் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

கடுமையாக கண்டித்த ஸ்டாலின்: இந்த நிலையில், திமுக எம்பி செந்தில் குமாரை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக ஆர் எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார்.

இதனை அறிந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார். செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், "முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.

 Controversy about Hindi language states, Stalin strongly condemned DMK MP Senthilkumar

கண்ணியம், கட்டுப்பாடு: எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார். பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+