திமுகவின் ‛பி டீமா’ தவெக? பக்ரீத் ஓகே! விநாயகர் சதுர்த்தி வாழ்த்து எங்கே? அடுத்த சர்ச்சையில் விஜய்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். செப்டம்பர் 23ம் தேதி முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இந்நிலையில் தான் நடிகர் விஜய் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் திமுகவின் ‛பி டீமா’ தவெக என்ற புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்பது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்தும், விநாயகர் போட்டோவுக்கும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

அதேபோல் இந்து அமைப்பினர் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ளார். கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதன்பிறகு நிர்வாகிகள் நியமனம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இதற்கான பணியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயிடம் இருந்து எந்த வாழ்த்து செய்தியும் வரவில்லை. இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
முன்னதாக இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடினர். இதற்காக கடந்த ஜூன் மாதம் 17 ம் தேதி நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,‛‛ அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் பக்ரீத்துக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை கிளம்பி உள்ளது. விஜயின் இந்த நடவடிக்கையை பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தற்போது விமர்சிக்க தொடங்கி உள்ளனர். பொதுவாக தமிழகத்தில் இந்து பண்டிகைகளுக்கு திமுக சார்பிலும், திமுக தலைவர்கள் சார்பிலும் வாழ்த்து என்பது தெரிவிக்கப்படாது. மாறாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் பண்டிகைக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த பாணியில் நடிகர் விஜயும் செயல்படுகிறார் என தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி 8 மாதங்கள் ஆனாலும் கூட இன்னும் ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. கட்சியின் பெயரை கூட அவர் அறிக்கையாக தான் வெளியிட்டார். கட்சி கொடி அறிமுகம் செய்தபோதும் அவர் எதுவும் பேசவில்லை. மாறாக 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கியபோது மட்டும் தான் விழா நடக்கும் அரங்க மேடையில் கொஞ்சம் அரசியல் பேசினார். மற்றபடி அவர் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் தான் அரசியல் செய்து வருகிறார்.
குறிப்பாக முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் அவர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரை அவரிடம் இருந்து வாழ்த்து செய்தி என்பது வரவே இல்லை என்பதால் இந்த ஒரு விவகாரத்தில் திமுகவினரின் ‛பி டீமாக' நடிகர் விஜய் செயல்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னதாக நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம்












Click it and Unblock the Notifications