‛லியோ’ பட போஸ்டரில் சிகரெட்டுடன் நடிகர் விஜய்! வெடித்த சர்ச்சை.. அன்புமணி ராமதாஸ் பரபர ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் தயாராகும் லியோ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகள், மாணவர்களை சுட்டிக்காட்டி நடிகர் விஜய்க்கு அறிவுரையையும் அவர் வழங்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் விரைவில் பிறந்தநாள் கொண்டாட உள்ளார்.

வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாட உள்ளார். இந்நிலையில் தான் அவரது பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் போஸ்டரோடு அறிவித்தார்.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்துள்ளார். இதற்கு தற்போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பது என்பது உடல்நலத்துக்கு கேடானது. தற்போது நடிகர் விஜய்க்கு மாணவர்கள், குழந்தைகள் என ஏராளமானவர்கள் ரசிகர்கள் உள்ளனர். இத்தகைய சூழலில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் போஸ்டர் என்பது இளைய தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் விஜய்க்கு அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.

Controversy erupts after actor Vijay smoking cigarette in Leo movie poster, Anbumani Ramadoss Condemns

புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மது விலக்கு அமல்படுத்த வேண்டும். புகையிலை பொருட்கள், போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் சட்டங்களை பிறப்பித்து முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போதைய கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் லியோ படம் தொடர்பான காட்சியில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+