திரிஷாவுக்காக கூட பேசாத விஜய்.. இதில் வேலுநாச்சியார் படம் வேற! எப்பதான் பேசுவீங்க.. பறந்த கண்டனம்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் குறித்தும் திரிஷா குறித்தும் அவதூறாக பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தனது பேச்சுக்கு நயினாரும் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வேலுநாச்சியாரை கொள்கை தலைவராக கொண்ட விஜய், பெண்களை இழிவாக பேசிய நயினார் நாகேந்திரன் குறித்து மௌனம் காப்பது ஏன்? என விடுதலை சிறுத்தைகளின் கட்சியில் துணை பொது செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவரும் நெல்லை எம்எல்ஏவுமான நாகேந்திரன் விஜய் குறித்தும் நடிகை திரிஷா குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை விமர்சிக்கும் போது நடிகை திரிஷாவை விட்டு அவர் வெளியே வரவேண்டும் எனவும் பேசினார். நாகேந்திரனின் பேச்சு தமிழக அரசியல் மட்டுமல்லாது திரையுலகிலும் பலத்த கண்டனங்களை பெற்றது.

நயினார் நாகேந்திரன் பேச்சு
குறிப்பாக திமுகவின் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் பல்வேறு மகளிர் அமைப்புகளும் நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை திரிஷா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். "தமிழக அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் பேசுவார் என தான் நினைக்கவில்லை" எனவும், "அரசியலைப் பொறுத்தவரை நடுநிலையாகவே நான் இருக்க விரும்புகிறேன்.. தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.
திரிஷா சர்ச்சை
திரிஷாவின் அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே நயினார் நாகேந்திரன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு தனி நபர் விமர்சனத்தையும் தான் அனுமதித்ததில்லை எனவும் அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை எனவும், பாஜக மூத்த தலைவர்களான வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் இது தொடர்பாக தன்னிடம் பேசியதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட தனது வீட்டுக்கு வந்த போது இது குறித்து பேசியதாக கூறிய நயினார். உண்மையில் யாரேனும் தனது பேச்சால் வருத்தப்படுபவர்களேயானால் என்னுடைய வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன் என பேசி இருந்தார்.
நயினார் வருத்தம்
திரிஷா கண்டனம் தெரிவித்த சில நிமிடங்களிலேயே நயினார் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவினர் கூட நயினார் நாகேந்திரனின் பேச்சை கண்டித்த நிலையில் விஜய் இதுவரை மௌனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு.
வன்னியரசு கண்டனம்
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"நடிகை திரிஷா அவர்களின் தனிப்பட்ட வாழ்வை இழிவுபடுத்தி பேசிய பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரனின் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது மட்டுமல்ல; அருவருப்பானது. பாஜகவின் இயல்பே இது தான். பெண்களை இப்படித்தான் சனாதனக்கோட்பாட்டின் அடிப்படையில் பாஜக தலைவர்கள் இழிவுபடுத்தி வருகிறார்கள். இந்த அருவருப்பான செயலை எமது தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டித்தனர்.
இதை கண்டிக்காத ஒரே தலைவர் நடிகர் விஜய் அவர்கள் தான்.
வேலுநாச்சியார்
கொள்கை தலைவராக வீரமங்கை வேலு நாச்சியார் படத்தை மட்டும போட்டு அரசியல் செய்யும் விஜய் அவர்கள் பெண்ணை தொடர்பு படுத்தி இழிவு படுத்தும் போது கள்ள மவுனம் காப்பது ஏன்?கொள்கை எதிரி பாஜக என வீராவேசம் பேசும் விஜய் அவர்கள், இதுவரை பாஜகவின் எந்த கொள்கையையும் விமர்சித்ததாக கூட தெரியவில்லை. பாஜகவின் கொள்கையை எதிர்க்க திராணி இல்லையென்றாலும், தன்னை சம்மந்தப்படுத்தி ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதை எப்படி வேடிக்கை பார்க்கிறார் விஜய்? பாஜகவை கண்டிக்க அவ்வளவு அச்சமா? தன்னை ஆளாக்கிய சினிமாவுக்கும் தன்னுடன் நடித்த நடிகைக்குமே எதுவும் செய்யாத விஜய் அவர்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கா நல்லது செய்யப்போகிறார்?" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications