கருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்ந்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..!

திமுக அடித்து ஒட்டும் போஸ்டர்களில் கருணாநிதி பெயர் காணாமல் போய்வருகிறது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில் கருணாநிதி பெயர் இல்லை- வீடியோ

    சென்னை: "உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழாவாகட்டும், அவரை வாழ்த்தி ஒட்டும் போஸ்டர்கள் ஆகட்டும்.. கருணாநிதி பெயரை காணோமே" என்ற அங்கலாய்ப்பு முணுமுணுக்க தொடங்கி உள்ளது!

    திமுகவுக்கு வாரிசு அரசியல் தவிர என்ன தெரியும், உதயநிதிக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம், இவர் இதுவரைக்கும் இந்த கட்சியில் என்ன செய்துவிட்டார்ன்னு இப்படி ஒரு பெரிய பொறுப்பு, என்ற பலவித கேள்விகள், விமர்சனங்கள், கண்டனங்கள், கேலிகள் அனைத்தையும் உடைத்துவிட்டு வேகவேகமாக முன்னேறி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்!

    இப்படிப்பட்ட விமர்சனங்களை உடைத்தெறியவோ என்னவோ, அடுத்தடுத்த கூட்டங்கள், நிர்வாகிகள் தேர்வு, உறுப்பினர் சேர்க்கை என படுவேகமாக செயல்பட்டு வருகிறார். இந்த வேகத்தில் போனால் விரைவில் இளைஞர் அணி பதவியில் ஸ்டாலினையே மிஞ்சி விடுவார் என்ற அளவுக்கு பேசப்பட்டும் வருகிறார்.

    கருணாநிதி

    கருணாநிதி

    ஆனால், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழாக்களிலும், அது சம்பந்தப்பட்ட போஸ்டர்களிலும் கருணாநிதி பெயர் இடம்பெறுவதில்லை என்ற பேச்சு சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு எந்த விதத்திலும் உதயநிதி காரணமாக இருக்க முடியாது.

    போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    எந்த ஊரில் நடக்கும் விழாவையும், வால்போஸ்ட்டர்களையும் உதயநிதியே முன்னின்று அடித்து ஒட்டிக் கொண்டிருக்க முடியாது. அது அந்தந்த விழா ஒருங்கிணைப்பாளரை பொறுத்த விஷயம். உதயநிதி மீதுள்ள பாசமோ, அல்லது தீவிர பற்று காரணமாகவோ ஸ்டாலின், உதயநிதி, மற்றும் அந்தந்த மாவட்ட தலைவர்களை முன்னிறுத்தியே போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன.

    அடித்தளம்

    அடித்தளம்

    ஆனால் இதுபோல தொடர்ந்து கருணாநிதி படங்கள் இடம் பெறாமல் தவிர்க்கப்படுவது கட்சியின் மூத்தவர்களை காயப்படுத்தி வருகிறது. காரணம் அவர்களைப் பொறுத்தவரை திமுக என்றால் கருணாநிதிதான். ஸ்டாலினைக் கூட கருணாநிதிக்காக மட்டுமே ஏற்றுக் கொண்ட மூத்தவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் கட்சியின் அடித்தளமும் கூட.

    இளைஞர் அணி

    இளைஞர் அணி

    எனவே அவர்கள் மனதையும் பாதிக்காத வகையில் கட்சியை வளர்த்துச் செல்ல திமுக இளைஞர் அணியினர் முன்வர வேண்டும்.. அதை உதயநிதி உறுதி செய்ய வேண்டும் என்று கட்சியினர் கருதுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+