மதம் மாறியவர்கள் கலப்புத் திருமண சான்றிதழ் பெற முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதம் மாறியதால் ஜாதி மாறுவதில்லை, மதம் மாறியதை வைத்து கலப்புத்திருமணச்சான்றிதழ் பெற முடியாது, மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதம் மாறியவர் கலப்புத்திருமணம் சான்றிதழ் கோரி விண்ணப்பம்
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.

சான்றிதழ் வழங்க அரசு மறுப்பு
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாச்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க முடியாது என கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பால்ராஜ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 1997 ஆண்டு அரசாணைப்படி மதமாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்க முடியாது என்பதால், மனுதரார் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
இதையடுத்து, மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரேசாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் - மனைவிக்கு கலப்பு மண சான்று பெற தகுதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கலப்புத் திருமணச் சான்றிதழ்
மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications