Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குண்டூசியானாலும்".. 2 கோர்ட்டிலும் தண்டிக்கப்பட்ட ராஜேஷ்தாஸுக்கு தண்டனை நிறுத்தம்? இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான தண்டனையை நிறுத்தி வைக்கும் மனுமீதான வழக்கில், காவல்துறை பதிலளிக்குமாறு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்தவழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

Convicted by two courts given concessions and Judgement in Ex DGP Rajesh das in Chennai High Court

அதிகாரி: அப்போது முதல்வரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். பிறகு இது தொடர்பாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது...

இதில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 வருட ஜெயில் தண்டனை விதித்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், புகார் அளிக்க சென்ற அந்த பெண் அதிகாரியின் காரை மறித்ததாக, முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

விசாரணை: இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ராஜேஷ் தாசின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்..

எனினும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ்தாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.தண்டபானி முன்பாக நேற்று நடந்தது.

தண்டனை நிறுத்தம்: அப்போது ராஜேஷ்தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, "காவல்துறையில் உயர் பதவி வகித்தமனுதாரர், ஒருவேளை மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆவது? அதனால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதி, "சாதாரண மனிதன் ஒரு குண்டூசியை திருடினால்கூட உடனடியாக கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்குப் பிறகுதான் அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட மனுதாரரான ராஜேஷ்தாஸூக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?

ஜாமீன்: இந்த வழக்கில் சரண் அடைந்துவிட்டு அதன்பிறகு ஜாமீன் கோரலாமே? மனு மீதான காவல்துறையின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், "மனுதாரருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் உள்ளன. எனவே, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது. அவருக்கு எதிராக போதிய அதிகாரங்கள் உள்ளன.. இந்த வழக்கில் பதிலளிக்க காலஅவகாசம் தேவை என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை இன்றைய தினம் அதாவது ஏப்ரல் 17க்கு தள்ளி வைத்துள்ளார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+