அட பாவமே! யாரு கண்ணு பட்டுச்சோ.. புது கார் வாங்கின 6 மாதத்தில் விபத்தில் சிக்கிய CWC சக்தி
சென்னை: கார் வாங்கிய 6 மாதத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சக்தி விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் சீரியல்களுக்கு மத்தியில் சில நிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்துள்ளன. அவற்றில் மக்களால் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ். அதன் பிறகு குக் வித் கோமாளி.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் போது சிலருக்கு படவாய்ப்புகள் வாசற்கதவை தட்டுவதால் இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பிரபலங்கள் ஆர்வமாக பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருகின்றன. இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் விதவிதமாக சமைப்பதை பார்க்கும் ஆஹா நடிப்பதில் மட்டுமில்லாமல் சமைப்பதிலும் புத்திசாலிகளாக இருக்கிறார்களே என பெருமைப்பட வைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒருவர் கூட தங்கள் பெர்ஃபாம்மன்ஸை விடாமல் செய்கிறார்கள்.
யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டுகிறார்கள். இதுதான் இந்த நிகழ்ச்சி மக்கள் முன்பு நிலைத்திருக்க வைக்கிறது. இதில் புகழ், பாலா, தங்கதுரை, குரேஷி உள்ளிட்ட கோமாளிகள் நிகழ்ச்சியின் ஆணிவேர்களாக இருந்து மக்களை சிரிக்க வைக்கிறார்கள். இதில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கலாய்க்கலாம்.
இதுவரை இது போன்ற பிரச்சினை வந்ததே இல்லை. அந்தளவுக்கு கோமாளிகளின் லூட்டி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அந்த வகைகளில் முதல் மூன்று சீசன்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டவர் சக்தி. இந்த 3 சீசன்களிலும் அதிகமாக கலந்து கொண்ட சக்தி 4ஆவது சீசனில் குறைவாகவே கலந்து கொள்கிறார்.
இவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் யூடியூப் சேனலும் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம்தான் புதிய காரை வாங்கினார். கார் வாங்கி 6 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இவருடைய கார் விபத்தில் சிக்கியுள்ளதாக அவரே கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சக்தி தனது காரில் சென்றுக் கொண்டிருந்தாராம்.
அப்போது அவரது காரை ஒரு பேருந்து உரசியபடி வந்து இடித்துவிட்டது. இதனால் சக்தியின் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் காருக்கு எந்த வித பெரிய சேதமும் இல்லை என தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சக்தியின் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்கள். மேலும் பூரண குணமடையவும் வாழ்த்துகிறார்கள்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications