Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shrutika: CWC ஸ்ருதிகாவுக்கு என்னாச்சு? கண் வீங்கி! முகம் மாறி! The 50 ஷோவிலிருந்து வெளியேறுகிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி புகழ் நடிகை ஸ்ருதிகா அர்ஜுனுக்கு கண்கள் வீங்கி, கண்ணே திறக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. அவர் தி 50 எனும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறார் என இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார்.

வீங்கிய கண்களுடன் அவர் தனது இன்ஸ்டாவில் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இது கண் நோய் அல்லது மெட்ராஜ் ஐ இல்லை. எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளது. அதிக காய்ச்சலால் அவதிப்படுகிறேன். இதனால் கண்களில் தொற்று ஏற்பட்டு கண்கள் வீங்கி காணப்படுகின்றன.

Shrutika Arjun
Photo Credit:

கண்களை திறக்க கூட முடியவில்லை. அது போல் வயிற்றிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது நான், தி 50 எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறேன், அதில் இருந்து விலக எனக்கு மனம் வரவில்லை. அதனால் 3 முதல் 5 நாட்களுக்கு ஓய்வு எடுத்து கொண்டு மீண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன் என ஸ்ருதிகா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதிகாவின் கண்கள் எல்லாம் கலங்கி, முகமே டல்லாக இருப்பதால் ரசிகர்கள் என்னாச்சு என கேட்டு வருகிறார்கள். மேலும் இந்தி தெரியாவிட்டாலும் நீங்கள் இருப்பதால்தான் தி 50 நிகழ்ச்சியை பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளதற்கு ஸ்ருதிகா, "உங்கள் அன்புக்கு நன்றி, விரைவில் நிகழ்ச்சிக்கு வந்துவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஸ்ருதிகா

ஸ்ருதிகா அர்ஜுன் (Shrutika Arjun Raaj) தமிழ் சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நபர். அவர் முன்னாள் திரைப்பட நடிகை, தொழிலதிபர் மற்றும் சமூக ஊடக பிரபலம். தற்போது The 50 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

தேங்காய் சீனிவாசன்

இவர் செப்டம்பர் 17, 1987-ல் பிறந்தவர் (தற்போது வயது 38). சென்னையை சேர்ந்தவர். தமிழ் நடிகர் தேங்காய் சீனிவாசன் (Thengai Srinivasan) இவரது தாத்தா (தந்தை பக்கம்). அவர் 965-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்த புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். ஸ்ருதிகா பிறந்து ஒரு மாதத்திலேயே அவர் மரணமடைந்தார். தந்தை தமிழர், தாய் பஞ்சாபி.

உறவினர்களில் நடிகர் யோகி உள்ளிட்டோர் உள்ளனர். கணவர் அர்ஜுன் ராஜ் (தொழிலதிபர்). ஒரு மகன் ஆரவ் (Arav) உள்ளார். திருமணம் 2011-ல் நடந்தது.

4 படங்களில் நடித்த ஸ்ருதிகா

16 வயதில் (2002) சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ (Sri) படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதே ஆண்டு ஆல்பம் (Album) படத்தில் நடித்தார். மாதவனுடன் நளதமயந்தி (Nala Damayanthi) படத்தில் சிறிய கதாபாத்திரம். தித்திக்குதே (Thithikudhe) போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்தில் Swapnam Kondu Thulabharam (சுரேஷ் கோபி, குஞ்சாக்கோ பாபன் உடன்) போன்றவை. ஆனால் அனைத்து படங்களும் வெற்றி பெறவில்லை.

965 படங்கள்

4 படங்களுக்குப் பிறகு நடிப்பை விட்டுவிட்டு திருமண வாழ்க்கைக்கு மாறினார். சமீபத்தில் The 50 ஷோவில் "என் தாத்தா 965 படங்கள் நடித்தார், ஆனால் நான் nepotism-ஐ waste செய்துவிட்டேன், என் படங்கள் flop ஆனது" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

தோல் பராமரிப்பு

2018-ல் ஆயுர்வேத தோல் பராமரிப்பு பிராண்ட் Haappy Herbs-ஐ தொடங்கினார். பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்து விற்கிறார். 2022-ல் குக் வித் கோமாளி (Cooku with Comali) சீசன் 3-ல் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இது அவருக்கு பெரும் புகழ் தந்தது.

இந்தி பிக் பாஸ்

2024-ல் ஹிந்தி பிக் பாஸ் 18 (Bigg Boss Hindi Season 18) இல் முதல் தமிழ் பெண்ணாக பங்கேற்றார். அப்போது "நான் 4 படங்களில் நடித்துள்ளேன், நான்குமே பிளாஃப்" என ஸ்ருதிகா சிரித்தபடியே சொல்லி சல்மான் கானையும் சிரிக்க வைத்துவிட்டார். தற்போது "The 50" ஷோவில் உள்ளார். சமீபத்தில் கண் தொற்று (eye infection) மற்றும் உடல்நலக் குறைவால் சிறிது நாட்கள் வெளியேற உள்ளார்.

2025 அக்டோபரில் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது கணவர் அர்ஜுன் கைத்தாங்கலாக கவனித்தது வைரலானது. "கணவரின் அன்பால் மீண்டேன்" என்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+