சமையல் எரிவாயு தட்டுப்பாடு.. அடுப்பில்லாமல் வீட்டிலேயே அற்புதமான உணவுகளை செய்வது எப்படி
சென்னை: மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மத்திய அரசு இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாட்கள் கட்டாயக் காத்திருப்பு காலத்தை அமல்படுத்தியுள்ளதால், இல்லத்தரசிகள் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். இப்படியான சூழலில் ஆரோக்கியமான மற்றும் 'அடுப்பில்லா சமையல்முறைகள் பற்றி பார்ப்போம்.
தமிழநாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் முன்பதிவு செய்த பிறகும் சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களும் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. மக்கள் மாற்று வழிகளை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர். "கேஸ் சிலிண்டர் இல்லையென்றால் எப்படிச் சமைப்பது?" என்ற கேள்விக்கு விடையாக, ஆரோக்கியமான மற்றும் 'அடுப்பில்லா சமையல் முறைகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எளிமையான மாற்று உணவு யோசனைகள்
காலையில் அவசரமான நேரங்களில் கேஸ் அடுப்பைப் பயன்படுத்தாமல் செய்யக்கூடிய மிகச்சிறந்த உணவு அவல். அவலைச் சுத்தமான தண்ணீரில் நனைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை மற்றும் வாழைப்பழம் சேர்த்துச் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்கும். இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
அதேபோல், தயிர் அவல், நறுக்கிய காய்கறிகள் சேர்த்த அவல் உப்புமா (ஊறவைத்த அவலில் செய்வது) போன்றவை மதிய உணவிற்கும் ஏற்றவை. முளைகட்டிய தானியங்கள், வெள்ளரிக்காய், கேரட் மற்றும் வேர்க்கடலை சேர்த்த 'புரதச் சத்து நிறைந்த சாலட்' வகைகளைச் சமைக்காமலேயே தயாரித்து உண்ணலாம்.
தட்டுப்பாட்டிற்கான காரணம் என்ன
மேற்கு ஆசியாவில் (உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல் போக்குவரத்துப் பாதையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், இந்தியா போன்ற நாடுகளுக்கு எரிபொருள் வந்து சேருவதில் தாமதம் ஏற்படுகிறது. பதுக்கலைத் தவிர்க்கவே 25 நாட்கள் காத்திருப்பு விதியை அரசு கொண்டு வந்துள்ளது.
மாற்று வழிகள்
சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை, மக்கள் முடிந்தவரை மின்சார அடுப்புகள், சோலார் குக்கர்கள் அல்லது மின்சாரச் சோறு சமைக்கும் பாத்திரங்களை பயன்படுத்தலாம். ஒருவேளை மின்சாரமும் இல்லையென்றால், பழங்கள், பேரீச்சம்பழம், நட்ஸ் மற்றும் பால் சார்ந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது சிறந்தது. அதேநேரம் விறகு அடுப்பில்லேயே எலக்ட்ரிக் விறகு அடுப்பு வந்துள்ளது. அதையும் முயற்சி செய்யலாம். இந்தத் தற்காலிக நெருக்கடியைச் சமாளிக்க, குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தும் சமையல் முறைகளைக் கையாள்வதும், ஆரோக்கியமான அடுப்பில்லா உணவுகளுக்கு மாறுவதுமே தற்போதைய தீர்வாக பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications