வறண்ட வானிலைக்கு நடுவே ஜில் அறிவிப்பு..2 நாட்களுக்கு மழை..எங்கு குடை அவசியம் தெரியுமா?
தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் அதிகபட்சமாக 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் சரியான அளவு பெய்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த ஜனவரி மாதத்துடன் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்த பின்னர் பனிக்காலம் தொடங்கி விட்டது. மூடு பனி ஒருபக்கம் அதிகரிக்க குளிரும் வாட்டி வதைத்தது.

கடந்த சில நாட்களாகவே வெயில் சுள்ளென்று அடிக்கிறது. வழக்கமாக மார்ச் மாத மத்தியில்தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாவே வெயில் கோடை காலத்தைப் போல சுட்டெரிக்கிறது. தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் அதிகபட்சமாக 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 26ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 27, 28ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினக்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஜில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications