கூலி படத்தை தாக்கி பேசுங்க.. விமர்சகர்களுக்கு காசு கொடுத்த டாப் ஹீரோ? கடுப்பான ரஜினி ஃபேன்ஸ்
சென்னை: கோலிவுட்டின் தற்போதைய பேசுபொருளாக கூலி திரைப்படம் மட்டுமல்லாமல், திரைக்குப் பின்னால் நடக்கும் மறைமுக மோதலும் பேசுபொருளாக மாறியுள்ளது. ரஜினிகாந்தின் சமீபத்திய பிளாக்பஸ்டர் படமான கூலியை விமர்சிக்க, ஒரு முன்னணி நடிகர் விமர்சகர்களுக்கு ரகசியமாகப் பணம் கொடுத்ததாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ரஜினிகாந்த் ரசிகர்கள் இது தொடர்பாக புகார்களை வைத்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கூலி திரைப்படம் வெளியானது. முன்பதிவுகளும் அதிக அளவில் இருந்தன, ஒற்றைத் திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் என எல்லா இடங்களிலும் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்கு முன்பே, படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வர தொடங்கி உள்ளன..

கூலி விமர்சனம்
வெளியான சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களிலும், யூடியூபிலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் குவியத் தொடங்கின. கூலி "காலாவதியான படம்" என்றும், சிலர் "சூப்பர் ஸ்டாரின் பலவீனமான படம்""லோகேஷ் கனகராஜின் பலவீனமான படம்" என்றும் விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன. இதில் உண்மையான மக்கள் விமர்சனங்கள் உள்ளது. ஆனால் அது தாண்டி நிறைய பொய்யான விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விமர்சனத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், வெளியீட்டு நேரம், குறிப்பிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டிய விதம் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாகவே தோன்றுவதாக ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர். அதாவது யாரோ எழுதிக்கொடுத்தது போல இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன.
கூலி படம் - ரஜினிகாந்த் மோதல்
ரஜினிகாந்தின் ஆதிக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு போட்டி நடிகர், திரைக்குப் பின்னால் இருந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமர்சகர்களுக்கு பணம் கொடுத்து, இணையத்தில் எதிர்மறை விமர்சனங்களை பரப்பி, ரசிகர்களை பயமுறுத்தி, முதல் வார வசூலை பாதிக்கச் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்திருக்கலாம் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் இது தொடர்பாக புகார்களை வைத்து வருகின்றனர்.
ஆனால், இந்தத் திட்டம் தற்போது தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. ரஜினியின் தீவிர ரசிகர்கள் இந்த வடிவத்தை உடனடியாக அடையாளம் கண்டு, "பணத்தைப் பெற்றுக்கொண்டு செய்யப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள்" என்று கூறத் தொடங்கினர். கூலிக்கு ஆதரவான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. மேலும், நடுநிலையான பல ரசிகர்கள், எதிர்மறை விமர்சனங்கள் உண்மையா என்று தெரிந்துகொள்ள படத்தைப் பார்த்ததாக தெரிவித்து உள்ளது. இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் இடையே இதனால் மோதல் ஏற்பட்டு உள்ளது.
கூலி விமர்சனம் - பின்னணியில் ஹீரோ
இந்த அசிங்கமான மோதல் பின்னால் உள்ள "டாப் நடிகர்" யார் என்பதை இதுவரை யாரும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும் பலரும் அவரின் பெயரை குறிப்பிட்டும் விமர்சனங்களை செய்து வருகின்றன. Coolie படத்திற்கு தமிழ்நாட்டில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக வடஇந்தியாவில் கூலி படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. வெளியாகி நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ₹159.52 கோடி வசூலித்து, இந்த ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. ரஜினி-லோகேஷ் கூட்டணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கியுள்ளது.
இந்தி மார்க்கெட் - Coolie திரைப்படம் வசூல்
கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளான வியாழக்கிழமையன்று ₹65 கோடி வசூலித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கத்தைப் பெற்றது. இதில் தமிழகத்தில் ₹44.5 கோடி, தெலுங்கு பதிப்பு ₹15.5 கோடி, இந்தி சந்தைகள் ₹4.5 கோடி, மற்றும் கன்னடப் பகுதிகள் ₹50 லட்சம் வசூலித்தன. Coolie படத்திற்கு தமிழ்நாட்டில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை ₹54.75 கோடி வசூலித்த போதிலும், இரண்டாம் நாளில் வசூலில் சற்று குறைவு ஏற்பட்டது. தமிழ் பதிப்பு தொடர்ந்து அதிக பங்களிப்பை வழங்கியது. தெலுங்கு மற்றும் இந்தி சந்தைகள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்தன. அங்கே தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக வார்2 படம் மோசமாக உள்ளதாக கூலி காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. சனிக்கிழமையன்று, திரைப்படம் ₹38.6 கோடி (ஆரம்ப மதிப்பீடுகள்) வசூலித்ததன் மூலம், மூன்று நாள் மொத்த வசூல் ₹118.5 கோடியாக உயர்ந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications