Coolie: அடித்து தூக்கும் கூலி.. இந்தியில் அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள்.. குவியும் மக்கள்.. தரமான ட்விஸ்ட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படம், திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்து இருந்தாலும் படம் மிகப்பெரிய அளவில் வடஇந்தியாவில் வரவேற்பை பெற்றுள்ளது.
Coolie படத்திற்கு தமிழ்நாட்டில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக வடஇந்தியாவில் கூலி படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. வெளியாகி நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ₹159.52 கோடி வசூலித்து, இந்த ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. ரஜினி-லோகேஷ் கூட்டணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கியுள்ளது.

இந்தி மார்க்கெட் மார்க்கெட் - Coolie திரைப்படம் வசூல்
கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளான வியாழக்கிழமையன்று ₹65 கோடி வசூலித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கத்தைப் பெற்றது. இதில் தமிழகத்தில் ₹44.5 கோடி, தெலுங்கு பதிப்பு ₹15.5 கோடி, இந்தி சந்தைகள் ₹4.5 கோடி, மற்றும் கன்னடப் பகுதிகள் ₹50 லட்சம் வசூலித்தன. Coolie படத்திற்கு தமிழ்நாட்டில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை ₹54.75 கோடி வசூலித்த போதிலும், இரண்டாம் நாளில் வசூலில் சற்று குறைவு ஏற்பட்டது. தமிழ் பதிப்பு தொடர்ந்து அதிக பங்களிப்பை வழங்கியது. தெலுங்கு மற்றும் இந்தி சந்தைகள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்தன. அங்கே தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக வார்2 படம் மோசமாக உள்ளதாக கூலி காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. சனிக்கிழமையன்று, திரைப்படம் ₹38.6 கோடி (ஆரம்ப மதிப்பீடுகள்) வசூலித்ததன் மூலம், மூன்று நாள் மொத்த வசூல் ₹118.5 கோடியாக உயர்ந்தது.
கூலி விமர்சனம்: கலவையான விமர்சனம்
நான்கு நாள் மொத்த வசூல் தற்போது ₹158.35 கோடியை எட்டியுள்ளது. நாகார்ஜுனா அக்கினேனி, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், மற்றும் அமீர் கான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இருப்பினும், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
'கூலி' திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதே வேகத்தில் போனால் கூலி படம் 1000 கோடி வசூலை அடிக்கவும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், 'வார் 2' படத்துடன் மோதுகிறபோதிலும், முன்கூட்டிய முன்பதிவில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, ரஜினியின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய ஆரம்ப வசூலை பதிவு செய்ய உள்ளது.
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் கூலி (coolie)
இந்த அதிரடி த்ரில்லர் படம், அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி தமிழ்நாட்டிற்கு வெளியிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது தனிப்பட்ட அடையாளத்தால் தனக்கென ஒரு சந்தையை உருவாக்கிக்கொண்டுள்ளார்.
தெலுங்கு சந்தையில் நாகார்ஜுனா, இந்தி சந்தையில் ஆமிர்கான், கன்னட சந்தையில் உபேந்திரா போன்றோரின் பங்களிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இது படத்தின் மீதான வணிகரீதியான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், 'கூலி' படத்தின் தயாரிப்பு குழுவினர், நடிகர் தேர்வு விஷயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications