Coolie ott release: ஓடிடியில் ரிலீசான ரஜினிகாந்தின் கூலி.. வீக் எண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! எங்கே தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த கூலி திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. படம் தியேட்டரில் வெளியாகி முழுதாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஓடிடியில் தற்போது வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில், ரஜினிகாந்த் உடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் படத்தில் முதன்முதலாக ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார்.
படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் டீசர், டைட்டில் கார்டு, மற்றும் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கூலி திரைப்படம் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது.

கூலி
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று படம் வெளியானது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து இருந்த நிலையில் படம் ஆயிரம் கோடி வசூலைத் தாண்டும் என பலரும் கூறினர். படம் வெளியான சில நாட்கள் படத்துக்கு அமோக வரவேற்புக் கிடைத்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் படம் மீதான விமர்சனம் அதிகரித்தது. படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள், கிளைமாக்ஸில் வரும் ஏஐ காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
ரஜினிகாந்த்
அனிருத்தின் இசை மட்டுமே படத்துக்கு ஆறுதலாக இருந்தது. படத்தில் நாகார்ஜுனா, சோபின் ஷாகிர் ஆகியோரின் நடிப்பு மட்டுமே பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக 2 கே கிட்ஸ்கள் நாகார்ஜுனாவை அதிக அளவில் கொண்டாடத் தொடங்கினர். அதே நேரத்தில் ஸ்ருதிஹாசன், பாலிவுட் நடிகர் ஆமிர் கான், கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா ஆகியோரை லோகேஷ் கனகராஜ் வீணடித்து விட்டதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
சன் பிக்சர்ஸ்
இதனால் நாளுக்கு நாள் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. படம் வெளியாகி நான்கு ஐந்து நாட்களில் நானூறு கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்குப் பிறகு படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் படம் எவ்வளவு தான் வசூல் ஆனது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை சன் பிக்சர்ஸ் மூலம் வெளியாகவில்லை. இந்த நிலையில் கூலி படம் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமேசான் பிரைம் ஓடிடி
வெளிநாடுகளிலும் 50 கோடிக்கு மேல் படம் வசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கூலி படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. அமேசான் பிரைம் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றிருந்த நிலையில் இன்று திடீரென படம் வெளியானது. படம் வெளியாகி முழுதாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அமேசான் பிரைம் மிகப் பெரிய தொகைக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சில படங்கள் திரையரங்குகளில் விமர்சனத்தைச் சந்தித்தாலும், ஓடிடியில் பெரிய அளவில் வரவேற்பு பெறும் நிலையில், கூலி அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications