இரவோடு இரவாக கூட்டுறவு துறை முடிவு! ரூ.7000 கோடி "சிங்கப்பெண்கள்" கடன் திட்டம்.. யாருக்கு கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி 2026 - 27ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது மக்களுக்கு பயன்தரக்கூடிய பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி கடன் வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நாளில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும், தேர்தல் வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

Cooperative Department

தலமைச்சர் விஜய்

விஜய், ஆட்சிக்கு வந்தவுடன் 500 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டார்.. அது உடனடியாக நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது.

அதற்குபிறகு, பெண் குழந்தைகள் மற்றும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் "சிங்கப்பெண் அதிரடிப் படை" உருவாக்கப்பட்டு அதன் சேவைகளும் தொடங்கி வைக்கப்பட்டன. இதனை தவிர அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்மாமன் பரிசாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் மகத்தான திட்டமும் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

இப்படிப்பட்ட சூழலில் ஆகஸ்ட் 5ம் தேதி தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது... இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்படுமா, தாய்மாமன் சீர் திட்டம் நடைமுறைக்கு வருமா, வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கூட்டுறவுத் துறை ஆய்வு கூட்டம்

பட்ஜெட்டை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை என ஒவ்வொரு துறை வாரியாகவும் முதலமைச்சர் விஜய் நேரில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில் நிலுவையில் உள்ள திட்டங்கள், புதிய அறிவிப்புகள் மற்றும் நிதி இருப்பு குறித்து ஆழமான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று அதாவது 28ம் தேதி, கூட்டுறவுத் துறை தொடர்பான முக்கிய ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், ரேஷன் கடைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்' குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

7000 கோடி கடன் உதவித்திட்டம்

அப்போது, சுயஉதவிக் குழுக்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு மிகப்பெரிய அறிவிப்புத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, "சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்" என்ற புதிய பெயரில், இளம் பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் புதிய தொழில்களைத் தொடங்கி வெற்றிபெற ஏதுவாக தொழில் முனைவோர் கடன்களை வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் மட்டும் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி கடன் நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் ஏற்கனவே பயிர்க்கடன், நகைக்கடன், சிறு வணிகக் கடன் போன்றவை வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்போது இந்த "சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்" மூலம் நலிவடைந்த பெண்களை தொழில் முனைவோராக மாற்றி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் யாருக்கெல்லாம் கடன் உதவி

மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளம் பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது. குறிப்பாக, சுய தொழில் தொடங்கி சொந்தக் காலில் நிற்க விரும்பும் இளம் பெண்களையும், சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களையும் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் வாயிலாக, புதிய தொழில்களைத் தொடங்கத் திட்டமிடும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், நலிவடைந்த சமூகத்தினருக்கும் இந்த ரூ. 7,000 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. .

எனினும், ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.. இது தமிழக மக்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+