வழக்கு போடாமல் இருக்க 4000 பணம்.. போலீஸை சிக்க வைத்த தாம்பரம் ரயில்வே ஊழியர்.. என்ன நடந்தது?
சென்னை: தாம்பரம் ரயில்வே யார்டில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வரும் இரண்டு பேர், ரயில்வே யார்டு பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சாதாரண உடையில் வந்த இரண்டு பேர் போலீஸ் என்று அவர்களை தாக்கினார்களாம். பின்னர் வழக்கு போடாமல் இருக்க பணம் வாங்கி உள்ளனர். அப்படி தாம்பரத்தில் ரயில்வே தற்காலிக ஊழியர்களை தாக்கி பணம் பறித்த போலீஸ்காரர் கைதானார்.
தஞ்சாவூரை சேர்ந்த 31 வயதாகும் மணிவண்ணன், 33 வயதாகும் ரமேஷ் ஆகிய இருவரும் சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் தங்கி, தாம்பரம் ரயில்வே யார்டில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார்கள். மணிவண்ணன், ரமேஷ் இருவரும் ரயில்வே யார்டு பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்கள். அப்போது அங்கு சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தாங்கள் போலீசார் எனக்கூறி இருவரையும் தாக்கினர். மேலும் அவர்கள் மேல் வழக்கு போடாமல் இருக்க தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரம் தரும்படி கேட்டார்களாம்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் மணிவண்ணன் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறாராம். இருவரும் தாக்கியதில் காயம் அடைந்த மணிவண்ணன் மற்றும் ரமேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். காயத்துக்கான காரணம் குறித்து டாக்டர்கள் கேட்டபோது, நடந்த சம்பவத்தை கூறினர். இதனால் மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சேலையூர் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மணிவண்ணன் மற்றும் ரமேஷ் ஆகியோரை தாக்கி பணம் பறித்தது, தாம்பரம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வரும் அருண்ராஜ் (45) மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக வேலை செய்யும் தனியார் நிறுவன ஊழியரான கிழக்கு தாம்பரம், கணபதி நகரை சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
விசாரணையில் இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரம் மது அருந்துபவர்கள், ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருப்பவர்களை போலீசார் என மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications