சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னடா இப்டி கிளம்பிட்டீங்க.. கொரோனாவைப் போய் எப்டிடா ருசிச்சு சாப்டுறது.. தொண்டைக்குள்ளயே இறங்காதே!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பீதி உலகம் முழுவதும் விரவிக் கிடந்தாலும், சில குறும்புக்கார ஆசாமிகள் அதை வைத்து கிச்சு கிச்சு மூட்டி காமெடியும் செய்து வருகிறார்கள். அப்படியாக தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பது தான் கொரோனா போண்டா.

கொரோனா வைரஸின் புகைப்படம் தான் இப்போது உலகளவில் வைரல். பார்த்தாலேயே வயிற்றில் புளியைக் கரைக்கும் அந்த புகைப்படத்தையும் வைத்து மீம்ஸ்கள், டிரோல்கள் உருவான வண்ணம் தான் உள்ளது. சேலைகளில் கூட கொரோனோ உருவம் போடப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் வெளியானது.

Corona bonda photos viral in social media

சரி மீம்ஸ்கள் தான் பரவாயில்லை என்றால், சிலர் அதில் இருந்தும் ஒருபடி மேலே போய் கொரோனோவை வைத்து உணவுப் பொருட்களையும் தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனோ போன்ற உருவத்தில் ஒரு தோசையின் புகைப்படம் வைரலானது.

தற்போது அதன் தொடர்ச்சியாக கொரோனா போண்டா என ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கொரோனோவைப் போன்றே கிரீடங்களுடன் பார்ப்பதற்கு அதே போன்ற வடிவமைப்பில் உள்ளது இந்த போண்டாக்கள். என்ன கொஞ்சம் நிறம் மட்டும் தான் வித்தியாசம்.

Corona bonda photos viral in social media

புகைப்படங்களில் கொரோனா வைரஸ் சிவப்பாக காட்டப்படுகிறது. இந்த போண்டோ பொன்னிறத்தில் உள்ளது. ஆனால் இப்படி சிரத்தை எடுத்து யார் இந்த போண்டாக்களை உருவாக்கிய புத்திசாலி எனத் தெரியவில்லை.

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போதே கிலி தான் ஏற்படுகிறது. இதை எப்படி சாப்பிடுவார்கள் எனத் தெரியவில்லை. கொரோனா என்ற வார்த்தையைக் கேட்டே மக்கள் அலறும் சூழலில் , அதை போண்டாவாக்கி வயிற்றிற்குள் தள்ளி கொன்று விடுங்கள் என்ற அந்த சமையல்காரரின் உழைப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

English summary
A photo of a evening snack bonda goes viral in social media as it looks like corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X