சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார் நாங்களா.. இல்லவே இல்லை.. எடப்பாடி பழனிசாமி புகாருக்கு வரிந்து கட்டி வந்த அமைச்சர்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவால் இறந்தவரின் உடலை உறவினர்களிடம் அப்படியே ஒப்படைத்ததால் தனது சொந்த ஊரின் அருகே உள்ள கிராமத்தில் 80 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த கிராமத்தினருக்கு கொரோனா ஏற்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எனது ஊரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மயிலம்பாடி கிராமம். இங்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடலை சுகாதாரத்துறையினர் கொடுத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி சொல்வது சரிதான்.. 10 ஆண்டில் மயிலாப்பூரில் பல தடவை மின் தடை.. ஆனால்.. எஸ் வி சேகர்செந்தில் பாலாஜி சொல்வது சரிதான்.. 10 ஆண்டில் மயிலாப்பூரில் பல தடவை மின் தடை.. ஆனால்.. எஸ் வி சேகர்

எடப்பாடி புகார்

எடப்பாடி புகார்

வீட்டிற்கு எடுத்து வந்து சடங்கு செய்தார்கள். உற்றார் உறவினர்கள் எல்லாம் துக்க நிகழ்ச்சிக்கு போனார்கள். பிறகு நான்கு நாட்கள் கழித்து இருமல், காய்ச்சல் வருகிறது. கிட்டத்தட்ட 126 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 80 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது என்றார்.

கொரோனா உடல்

கொரோனா உடல்

இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் உடலை அப்படியே ஒப்படைப்பதால் கொரோனா பரவுவதாக கூறினார். அண்மை காலங்களில் இப்படி கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பதை பரிசோதித்த பிறகு தான், அவரது உடல் ஒப்படைக்கப்பட்டு, உறவினர்களிடம் பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது. இந்த தகவலை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

எங்கள் ஆட்சி வெளிப்படைத்தன்மையான ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின், ஆட்சிபொறுப்பை ஏற்ற உடனே தெரிவித்தார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், ஒரு துறைசார்ந்த அதிகாரி ஒரு புள்ளி விவரத்தையும், மருத்துவ துறை சார்ந்த அதிகாரி ஒரு புள்ளி விவரத்தையும் இறப்பு விகிதத்தில் கூறினார்.

சோதனை செய்கிறோம்

சோதனை செய்கிறோம்

அந்த இறப்பு விகிதத்தில் ஒரு சர்ச்சை உருவாகியது. அந்த சர்ச்சையினால் துறை சார்ந்த செயலாளரே மாற்றப்பட்ட நிலையெல்லாம் இருந்தது என்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த ஆட்சியை பொறுத்தவரை இறந்த உடன் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தான் அவர்களின் உடல் வழங்கப்படுகிறது. எனவே கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை அப்படியே உரியவர்களிடம் ஒப்படைத்து கொரோனா தொற்று பரவல் ஏற்பட இந்த ஆட்சி காரணமாக இல்லை." என்று கூறினார்.

English summary
Minister Sekarbabu has denied allegations by opposition leader Edappadi Palanisamy that 80 people in a village near his hometown suffered corona positives as govt handed over the body of the deceased of corona to relatives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X