சரத்குமாருக்கு கொரோனா.. ராதிகா தகவல்.. டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு.. ஹைதராபாத்தில்!
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
சென்னை: பிரபல நடிகரும் சமக தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இதையடுத்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் சரத்குமார்.
Recommended Video
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவது போல தெரிந்தாலும், இன்னும் முழுமையாக குறையவில்லை.. வடமாநிலங்களில் இதன் வீரியம் பன்மடங்காகி உள்ளது.

தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதைவிட பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.இந்த கொரோனாவுக்காத்தான் பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாதென்று சினிமா, டிவி சீரியல் ஷூட்டிங் மொத்தமாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இயல்பு நிலைக்கு சினிமா உலகம் திரும்பி வருகிறது.. அதேசமயம், நடிகர், நடிகைகள் பலரும் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நிலையில் அவர்களில் ஒருசிலருக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரளாவில் நடிகர் பிருத்விராஜ், தமன்னா உட்பட பல டாப் ஸ்டார்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஹைதராபாத்துக்கு ஷூட்டிங் சென்றிருந்தார் சரத்குமார்.. அங்குதான் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இந்த தொற்றுக்கான சில அறிகுறிகள் தென்படவும் சரத்குமார் உடனடியாக டெஸ்ட் எடுத்துள்ளார்.. அந்த டெஸ்ட் முடிவில்தான் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ராதிகா சரத்குமார் ட்விட் போட்டு தெரிவித்துள்ளார்.
அதில், இன்று சரத்திற்கு ஹைதராபாத்தில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது.. அவர் நல்ல உடல் நலத்துடனும், சிறப்பான டாக்டர்களின் சிகிச்சையிலும் இருக்கிறார்.. அடுத்த நாட்களில் அவரது உடல்நிலை குறித்து வரும் தகவல்களை நானே உங்களுக்கு சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. சரத்குமார் எப்போதுமே டயட், உடற்பயிற்சி என்று இருப்பவர்.. தன் உடல்நலனில் தீவிரமான அக்கறை செலுத்துபவர்.. ஜிம் பாடி உடலையே கொரோனா அசைத்துவிட்டதே என்ற அதிர்ச்சி பீடித்து வருகிறது.. அதேசமயம், சரத் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென்றும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்... தமிழில் பிரபலமான நடிகர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications