தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 568 பேருக்கு தொற்று.. 689 பேர் டிஸ்சார்ஜ்.. 8 பேர் உயிரிழப்பு..!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Recommended Video

அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 33 ஆயிரத்து 585-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 25 நாட்களாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து ஆயிரத்துக்கும் கீழ் என குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 689 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 16ஆயிரத்து 205 -ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12,307 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொரோனா மட்டுமின்றி சர்க்கரை, சிறுநீரகம், இதயப்பிரச்சனை உள்ளிட்ட வேறு சில இணை வியாதிகளுக்கும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பூஜ்யத்திலும் உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் 61 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் 568 பேருக்கு மட்டும் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வெளியாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications