40 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க.. 2020ல் கொரோனா தாக்கும்னு.. ஆச்சரியமூட்டும் அதிசய கணிப்பு!
கொரோனா பற்றிய தகவல் 40 வருடத்திற்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது
சென்னை: என்னதான் மக்கள் தெள்ளத் தெளிவாக இருந்தாலும் ஒரு சில அதிசயங்களும், அற்புதங்களும் இந்த பூமியில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. அந்த வகையில் கொரோனோ பற்றின நம்ப முடியாத தகவல்கள் வெளியாகி உள்ளது.. இந்த நோயை பற்றி 40 வருஷத்துக்கு முன்னாடியே ஒருவர் எழுதி வைத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.. இந்த செய்தியைதான் "அப்படியா? உண்மையா?" என்று வாயை பிளந்து கேட்டு வருகின்றனர்.
Recommended Video
கொரோனா - இந்த பெயரையே நாம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.. இன்னும் இதற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை.. அதற்குள் உலகையே குலை நடுங்க வைத்துவிட்டது.
எங்கோ சீனாவில் ஒரு மூலையில் ஆரம்பித்த இந்த வைரஸ்.. நம்ம கோவை, திருவண்ணாமலை.. என லோக்கலில் மிக எளிதாக காற்றில் கிளம்பி வந்துவிட்டது.. "காற்று" என்பதால்தான் நம்மால் எதுவும் தடுக்க முடியாமல் கையை பிசைந்து நிற்கிறோம். இந்த நோயை பற்றி ஒரு எழுத்தாளர் 1981-ல் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.. இவரது பெயர் டீன் கூன்ட்ஸ்.. அந்த புத்தகத்தின் பெயர் தி ஐஸ் ஆப் டார்க்னஸ் (The eyes of Darkness)-.. இது ஒரு திரில்லர் கதை!

சுருக்கம்
கதை சுருக்கம் இதுதான்: கிறிஸ்டினா இவான்ஸ் என்ற பெண்ணின் மகன் டேனி, ஒரு முகாமுக்கு செல்கிறார்.. அங்கு போன ஒரே மாசத்தில் மகன் இறந்துவிடுகிறார்.. இந்த தகவல் கிரிஸ்டினாவுக்கு சொல்லப்படுகிறது... இதை அம்மாவால் தாங்கவே முடியவில்லை... மகனின் இழப்பையும் ஜீரணிக்க முடியவில்லை.. அதனால், ஒரு வருடத்திற்கு பிறகு மகனுக்கு அந்த முகாமில் என்னதான் ஆனது என்று கண்டுபிடிக்க முடிவு செய்கிறார்.

மகன் டேனி
அப்படி முயற்சி செய்யும்போதுதான், தன் மகன் டேனி சாகவில்லை.. உயிருடன் ஒரு மிலிட்டரி கேம்பில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்கிறார்.. சீனாவின் வுகானில் ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் போன்ற ஒரு ஆயுதத்தால் டேனி பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் கிறிஸ்டினாவுக்கு தெரியவருகிறது. இந்த வைரஸ் பற்றி சீன விஞ்ஞானி லீ சென் என்பவர், அமெரிக்க ராணுவத்திடம் சொல்கிறார்.. அந்த வைரசுக்கு அதாவது ஆயுதமாக கருதப்படும் அந்த வைரஸுக்கு "வுகான் 400" என்று பெயரிடுகிறார்.. இப்படி அந்த பல திருப்பங்களுடன் அந்த கதை செல்கிறது.

அதிசயம்
இப்போது இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், வுகான் 400 வைரஸ்தான் கொரோனா என்கிறார்கள்.. அந்த கதையில் வுகான் நகரில் தான் இந்த வைரஸ் துவங்குவதுபோலவே, இப்போதும் இந்த கொரோனா சீனாவின் அதே வுகான் நகரில்தான் துவங்கி உள்ளது.. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த கொரோன வைரஸ் பற்றி நமக்கு முதல் எச்சரிக்கை விடுத்த டாக்டர் பெயரும் லீ..தான்!
|
சுனாமி
இது ஒரு கற்பனை கதைதான்.. கிரைம் சம்பந்தப்பட்டதுதான்.. ஆனாலும் நம்ப முடியவில்லை.. "அன்பே சிவம்" படத்தில் கமல்ஹாசன் மாதவனுடன் பேசும்போது சுனாமியை பற்றி சொல்லுவார்.. ஆனால் சுனாமி என்ற வார்த்தையை நம்மில் பெரும்பாலானோர் அப்போது கேட்டது கூட இல்லை.. கமல் மாதவனிடம், "சுனாமி கூட இங்கு வருமாம், சுனாமின்னா என்னன்னு தெரியுமா?" என்று கேட்க, மாதவனோ, "தெரியும்...சார் அது பெரிய அலை" என்பார்.. உடனே கமல் "அது பெரிய அலை இல்லை.. மலை" என்பார். இதற்கு அடுத்த ஆண்டே சுனாமி நம்மை தாக்கியது. நமக்கு அப்போதுதான் கேள்விப்படாத இந்த வார்த்தையின் பயம் வெளிப்பட ஆரம்பித்தது.
|
வியப்புகள்
அதுபோலவேதான் இந்த கொரோனா வார்த்தையும், அதனை முன்கூட்டியே ஒரு எழுத்தாளர் எழுதியதும் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், அந்த கதையில் வுகான் 400 வைரஸ் தாக்கி எல்லாரும் இறந்துவிடுவார்களாம்.. ஆனால் கொரோனாவால் அப்படி இல்லை.. உயிரிழக்கும் வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள்!!

சில்வியா பிரவுன்
அதேபோல, இன்னொரு செய்தியும் வைரலாகி வருகிறது... பிரபல அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிரவுன் 2008-ல் End of Days என்ற புத்தகம் எழுதியுள்ளார்.. இதில் அவர் ஒரு நோயை பற்றி சொல்கிறார்.. அதாவது "2020-ம் வருடத்தில் நிமோனியா போன்ற ஒரு நோய் வரும்.. அது உலகம் முழுதும் பரவும்.. நுரையீரல்களையும் சுவாச குழாய்களையும் நாசம் செய்து அது பலருக்கு எமனாக முடியும்... எந்த மருந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாது.. எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்தும் விடும்" என்கிறார்.. இந்த கதையை நாம் எப்படி பார்ப்பது? கதைதானே? கற்பனைதானே என்றும் ஒதுக்க முடியாது? தற்செயல், யதார்த்தம் என்றும் சொல்லிவிட முடியாது!!
ஒரு அறிவியல் பூர்வமான விஷயத்தை முன்கூட்டியே இவ்வளவு துல்லியமாக கணித்து சொல்ல முடியுமா என தெரியவில்லை. ஆனால் எப்படி பார்த்தாலும் வியப்புகளை வாரி வழங்கியுள்ள இந்த எழுத்தாளர்களை "தீர்க்கதரிசிகள்" என்றுதான் சொல்ல தோன்றுகிறது!!
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications