சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அறிகுறியுடன் அனுமதி ஆன 2 சீன இளைஞர்கள்.. சென்னையில் பரபரப்பு.. தீவிர பரிசோதனை!

சென்னையில் தங்கி இருந்த 2 சீனர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவை முதலில் கண்டுபிடித்த டாக்டர்... வெளியான திக் பின்னணி

    சென்னை: சென்னையில் தங்கி இருந்த 2 சீனர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இன்னும் பரவவில்லை. கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை உள்ளிட்ட இரண்டு இடங்களில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்டது.இது போல மொத்தம் 9 பேருக்கு இந்த நோய் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

    சீனாவில் கைமீறிய கொரோனா.. 570ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் பலி! சீனாவில் கைமீறிய கொரோனா.. 570ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் பலி!

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    இது போல மொத்தம் 9 பேருக்கு இந்த நோய் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இவர்களில் 5 பேரின் ரத்த மாதிரி புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 5 பேருக்கும் வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்னும் 4 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் நோய் தாக்குதல் இல்லை. தமிழகத்தில் இந்த நோய் தாக்குதல் அச்சத்துடன் அனுமதி ஆன யாருக்கும் நோய் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

    இருவருக்கும் சோதனை

    இருவருக்கும் சோதனை

    இந்த நிலையில் சென்னையில் தங்கி இருந்த 2 சீனர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவாங் சிங், குவோ வே ஆகிய இருவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருவருக்கும் அவசர சோதனை நடந்து வருகிறது. இவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து வருகிறார்கள். தனியாக சோதனை நடந்து வருகிறது.

    சீனா வந்தனர்

    சீனா வந்தனர்

    சீனாவில் இருந்து இவர்கள் ஜனவரி தொடக்கத்தில் வந்துள்ளனர். தமிழகத்தில் சுற்றிபார்க்க இவர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் வுஹன் நகரத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர்களிடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வுஹன் நகரத்தில் இந்த வைரஸ் பரவிய பின், அங்கு செல்லாமல் தமிழகத்திலேயே இவர்கள் தங்கி உள்ளனர். வைரஸ் தாக்குதலால் இவர்கள் சீனா திரும்பவில்லை.

    திரும்ப அனுப்புவார்கள்

    திரும்ப அனுப்புவார்கள்

    இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக சீனாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். இந்த சம்பவம் சென்னை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வைரஸ் தொட்டால் பரவ கூடியது. அதேபோல் இந்த நோய் தாக்குதல் உள்ளவர்கள் எதை தொட்டாலும், அதை தொடுபவர்களுக்கும் இந்த வைரஸ் பரவும்.

    English summary
    Coronavirus: 2 China nationals admitted with symptoms in Chennai, Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X