இரண்டே மண்டலம்.. 50% கொரோனா நோயாளிகளின் ஒரே சோர்ஸ்.. வடசென்னையில் என்ன நடக்கிறது? பின்னணி!

சென்னையில் இருக்கும் இரண்டு மண்டலங்களில்தான் மிகவும் அதிகமான அளவில் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருக்கும் இரண்டு மண்டலங்களில்தான் மிகவும் அதிகமான அளவில் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தை குழப்பும் கொரோனா பேட்டர்ன்... என்ன காரணம்?

    தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. நேற்று தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அரியலூரில் 18, காஞ்சிபுரத்தில் 13, திருவள்ளூரில் 7, செங்கல்பட்டில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    தமிழகத்தில் நேற்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டியது- 1,301 பேர் பலி

    சென்னை நிலை

    சென்னை நிலை

    தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் 1257 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் மண்டல வாரியான விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் ராயபுரத்தில் 252 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் 20 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் 77 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மிக மோசம்

    மிக மோசம்

    அடையாறு 27 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேனாம்பேட்டையில் 145 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவிக நகரில் 290 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 108 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சோழிங்கநல்லூரில் 5 பேர், ஆலந்தூரில் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு மண்டலம் முக்கியம்

    இரண்டு மண்டலம் முக்கியம்

    சென்னையில் இருக்கும் இரண்டு மண்டலங்கள்தான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதியையும் சேர்த்து 542 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இருக்கும் ஆக்டிவ் கேஸ்களில் 50% கேஸ்கள் மொத்தமாக இங்கிருந்து மட்டும்தான் ஏற்பட்டுள்ளது. சென்னையின் மோசமான ஹாட் ஸ்பாட்டாக இந்த இடங்கள் மாறியுள்ளது.

    வடசென்னை பாதிப்பு

    வடசென்னை பாதிப்பு

    இந்த இரண்டு பகுதிகளும் சென்னையில் வடசென்னையின் கீழ் வருகிறது. சென்னையில் வடசென்னைதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டள்ளது. திருவொற்றியூர் பகுதியில் 20 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டையார்ப்பேட்டையில் 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் வடசென்னை பகுதியில் இருந்துதான் 70% கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. வடசென்னையில் மொத்தமாக கட்டுப்பாடுகளை அதிகரித்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

    நிறைய காரணம்

    நிறைய காரணம்


    வடசென்னையில் இப்படி நிறைய கொரோனா கேஸ்கள் ஏற்பட நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

    சென்னையில் வடசென்னையில்தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள். வடசென்னையின் மக்கள் தொகைதான் அதிகமாக இருக்கிறது.

    அதேபோல் சென்னையில் இங்குதான் அடிப்படை பணியாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகம் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் கொரோனா பரவலை கட்டுபடுத்த முடியவில்லை.

    இங்கே மக்கள் நெருக்கடி மிக அதிகம் என்பதால் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை.

    என்ன சோர்ஸ்

    என்ன சோர்ஸ்

    வடசென்னையில் இப்படி ஏற்படும் கேஸ்களில் 90% கேஸ்களுக்கு கடந்த 5 நாட்களாக காண்டாக்ட் என்ன என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதன்படி வடசென்னையில் உறுதியாக ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டது. வடசென்னையில் மட்டும் நேற்று 40 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இதனால் வடசென்னையில் கண்டிப்பாக சமூக பரவல் வந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

    சொதப்பியது

    சொதப்பியது

    மக்கள் அடிக்கடி வெளியே வந்த காரணத்தால் வடசென்னையில் கண்டெயின்மெண்ட் பிளான் மொத்தமாக சொதப்பி உள்ளது. அதேபோல் வடசென்னையில் காண்டாகட் டிரேசிங் பெரிய அளவில் தோல்வியை தழுவி உள்ளது. காண்டாகட் டிரேசிங் தொடக்கத்திலேயே சென்னையில் எங்கோ சொதப்பி உள்ளது. இனிமேல் காண்டாக்ட் டிரேசிங் செய்வதும் கடினம் அது பலனும் அளிக்காது என்று கூறுகிறார்கள்.

    முடியாது

    முடியாது

    இங்கே சமூக பரவல் ஏற்பட்டுள்ளதால் இனிமேல் பலருக்கு எப்படி கொரோனா ஏற்படுகிறது என்பது இனி கண்டுபிடிக்க முடியாது. திடீர் திடீர் என்று தொடர்பே இல்லாமல் இப்படி கேஸ்கள் இனி அதிகம் ஏற்படும். மொத்தமாக கூட்டம் கூட்டமாக மக்களை அழைத்து கொரோனா சோதனைகளை செய்ய வேண்டும். ரேண்டம் சோதனைகளை செய்தால் மட்டுமே இனிமேல் வடசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+