டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டியது- 1,301 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 1301 பேர் பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 39,980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1301. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10,633.

Coronvirus cases in India rises to 39,980

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2644. 24 மணிநேரத்தில் 83 பேர் மரணமடைந்துள்ளனர். மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிக பாதிப்பு நீடிக்கிறது.

மகாராஷ்டிராவில் 12296 பேரும் 2-வதாக குஜராத்தில் 5054 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 4122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிம் தோன்றிய அடுத்த நாளே.. எல்லையில் தென்கொரியாவுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய வடகொரிய ராணுவம்கிம் தோன்றிய அடுத்த நாளே.. எல்லையில் தென்கொரியாவுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய வடகொரிய ராணுவம்

Recommended Video

    15 நாட்கள் கழித்து வீடு திரும்பிய கொரோனா போராளி டாக்டர் விஜயஸ்ரீ

    தமிழகத்தில் 2757; ராஜஸ்தானில் 2770; உத்தரப்பிரதேசத்தில் 2487; மத்திய பிரதேசத்தில் 2846; ஆந்திராவில் 1525; தெலுங்கானாவின் 1063 பேர் கொரோனாவா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 521 பேரும் மத்திய பிரதேசத்தில் 151 பேரும் குஜராத்தில் 262 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

    கேரளாவில் 499 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 400 பேர் மீண்டுள்ளனர். தமிழகத்தில் 1341 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருக்கின்றனர்.

    English summary
    Total number of Coronvirus cases in India rises to 39,980 including 28,046 active cases, 10,633 cured and 1301 deaths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X