மதுரையில் மோசமான நிலை.. திருவள்ளூரில் அதிகமாகும் பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 134226 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு 17989 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எத்தனை

டிஸ்சார்ஜ் எத்தனை

தமிழகத்தில் நாளுக்கு நாள் டிஸ்சார்ஜ் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 46410 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.தமிழகத்தில் இன்று மட்டும் 3591 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 85915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மரணம்

மரணம்

ஆனால் கேஸ்கள் கொஞ்சம் குறைந்து வந்தாலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமின்று மற்ற மாவட்டங்களிலும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று 69 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 1898 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

வேறு எங்கு

வேறு எங்கு

சென்னைக்கு அடுத்து இன்று மதுரையில் 277 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 5757 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது .இன்று செங்கல்பட்டில் 237 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 7872 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று அதிகமாக திருவள்ளூரில் 346 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 6421 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இன்று சோதனை

இன்று சோதனை

தொடர்ந்து கொரோனா சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. இன்று 37825 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1566917 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 36628 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1500909 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+