2வது நாளாக சரிவு.. தமிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா..சென்னையில் 1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 245859 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவான கேஸ்கள் வந்துள்ளது. நேற்று தமிழகத்தில் 5864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இன்று அதேபோல் 5881 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1013 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 99794 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை நிலை

சென்னை நிலை

சென்னையில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் குறைந்தாலும், தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது. சென்னையில் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் இன்று 5778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் மொத்தமாக 183956 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மரணம் எண்ணிக்கை

மரணம் எண்ணிக்கை

ஒரு பக்கம் கேஸ்கள் அதிகமாகிறது , அதேபோல் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகிறது. ஆனால் இன்னொரு பக்கம் பலி எண்ணிக்கை அதிகமாகிறது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 57968 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 3935 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

சோதனை எத்தனை

சோதனை எத்தனை

இன்று 60276 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2658138 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 58350 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2560269 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

சென்னைக்கு அடுத்து

சென்னைக்கு அடுத்து

சென்னைக்கு அடுத்து இன்று செங்கல்பட்டில் 334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14534 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 373 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13836 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரத்தில் 485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9094 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+