4 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று 5951 பேருக்கு கொரோனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 391303 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருகிறது. 5500க்கும் குறைவான கேஸ்கள் தினமும் வந்த நிலையில், தற்போது மீண்டும் 5800க்கும் அதிகமான கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது என்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் 4 லட்சம் கொரோனா கேஸ்கள் என்ற எண்ணிக்கையை அடைய வாய்ப்புள்ளது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

தமிழகத்தில் தற்போது 52128 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் இன்று 1295 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 127949 பேருக்கு சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

மற்ற மாவட்டங்கள்

மற்ற மாவட்டங்கள்

சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் 326 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 24129 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 23064 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 322பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 12467 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சோதனை எத்தனை

சோதனை எத்தனை

தமிழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் கொரோனா சோதனை விவரம்,

இன்று 70211 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 4346861 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 67888 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4199492 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

மரணம் எண்ணிக்கை

மரணம் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று 6988 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 3,32,454 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+