மீண்டும் உயரும் கொரோனா கிராப்.. தமிழகத்தில் இன்று 5967 பேர் பாதிப்பு.. இதுவரை 3,85,352 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 5967 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த கேஸ்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 3,85,352 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. லேசாக சரிந்த கிராப் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

இ - பாஸ் தளர்வு உள்ளிட்ட நிறைய தளர்வுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. அதிலும் சென்னையில் கேஸ்கள் மீண்டும் 1200க்கும் அதிகமாக தினமும் வர தொடங்கி இருக்கிறது.

சென்னை நிலை

சென்னை நிலை

தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 53282 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1278 பேருக்கு கொரோனா ஏற்பட்டடுள்ளது. சென்னையில் மொத்தமாக 126677 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று 6129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3,25,456 பேர் இதுவரை மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பலி

பலி

தமிழகத்தில் 97 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் 100க்கும் குறைவான மரணங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து பலி எண்ணிக்கை, அதிலும் குறைந்த வயது கொண்டவர்கள் பலியாவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மொத்தமாக 6614 பேர் இதுவரை தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.

சென்னைக்கு அடுத்து

சென்னைக்கு அடுத்து

இன்று செங்கல்பட்டில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 23806 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 22759 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 12114 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சோதனை எத்தனை

சோதனை எத்தனை

இன்று 70023 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

4276640 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 67980 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 4131604 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+