டெஸ்ட்டில் வந்த ட்விஸ்ட்.. மண்டபத்தில் சுருண்டு விழுந்து மாண்டு.. மொத்த பேரையும் அலற விட்ட பெரியவர்

மகன் திருமணத்தில் சுருண்டு விழுந்து மாண்ட தந்தைக்கு கொரோனா உறுதியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்யாண கோலத்தில் இருந்த மகனை பார்த்து கொண்டே இருந்த தந்தை, மண்டபத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துவிட்டார்... இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட டெஸ்ட் ரிசல்ட் ஒட்டுமொத்த பேரையும் அலற வைத்து வருகிறது!

மணலியை சேர்ந்த அந்த முதியவருக்கு 63 வயதாகிறது... இவரது மகனுக்கு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயித்து இருந்தார்.. அதன்படியே நேற்று முன்தினம் கூடங்குளத்தில் இவர்களின் திருமணமும் நடந்தது.

coronavirus: 63 year old man dies in chennai due to coronavirus

மகன் கல்யாணத்தை பூரித்து பார்த்து கொண்டிருந்த அந்த பெரியவர் திடீரென மண்டபத்திலேயே சுருண்டுவிழுந்தார்.. அதனால் கல்யாண வீடே பரபரப்பாகிவிட்டது.. அங்கிருந்தோர் அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்... ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

இதையடுத்து, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில், அந்த பெரியவருக்கு தொற்று ஏதேனும் உள்ளதா என்று டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அவரது சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து லேப்-புக்கும் அனுப்பி வைத்தனர்.. அந்த ரிசல்ட்டில் அவருக்கு தொற்று இருப்பது கன்பார்ம் ஆனது.. இதை கேட்டதும் குடும்பத்தினர் அலறிவிட்டனர்.. இந்த தகவல் உடனடியாக கூடங்குளம் போலீசாருக்கும் சொல்லப்பட்டது.

அதனால் இறந்த முதியவரின் சடலத்தை ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்கள் என விசாரணை நடந்தது.. அதன்படி போலீசார் உள்பட 8 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டனர்... அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து, அவர்களின் சளி மாதிரிகளும் எடுக்கப்பட்டு டெஸ்ட்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த ரிசல்ட் இன்று வரும் என டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. எப்படியும் இந்த கல்யாணத்துக்கு 50 பேராவது வந்திருப்பார்கள் என்கிறார்கள்.. அப்படி வந்தவர்களில் யாருக்காவது பெரியவர் மூலம் தொற்று பரவியிருக்குமோ என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது.. அதனால் கல்யாணத்தக்கு வந்தவர்கள் யார் யார் என்று லிஸ்ட் எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இதுசம்பந்தமான மும்முரமான வேலையில் சுகாதார துறையினர் ஈடுபட்டுவந்தாலும், இந்த கல்யாண பரபரப்பும், அதை தொடர்ந்து நடந்த உயிரிழப்பும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+