சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென 3 நாட்களில் 9 பேர் பலி.. எல்லோருக்கும் ஒரே ஒற்றுமை.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணம்!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா காரணமாக 9 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா காரணமாக 9 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகமாகிக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா காரணமாக ஏற்படும் பலி எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக இதுவரை 45 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் தற்போது 1.4% ஆக உள்ளது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழக மக்களை இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சிசவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சி

மரணம்

மரணம்

தமிழகத்தில் கொரோனா காரணமாக நேற்று முதல் நாள் 4 பேர் பலியானார்கள். அதிகாலையில் அடுத்தடுத்து 4 பேர் பலியானார்கள். இதில் நான்கு பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். தாம்பரத்தை சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலை பலியானார். அவரை தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து வந்த சூளைமேட்டை சேர்ந்த வியாபாரி ஒருவர் பலியானார். அதே பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார். அதேபோல் சூளைமேட்டை சேர்ந்த 80 வயதான மூதாட்டி காலையில் பலியனார்.

தமிழகத்தில் தொடரும் மரணம்

தமிழகத்தில் தொடரும் மரணம்

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண் பலியானார். அதே மருத்துவமனையில் 73 வயது பெண் ஒருவர் பலியானார். ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயது பெண் பலியானார். இதைப்போல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண் பலியானார்.

8 பேர் பலி

8 பேர் பலி

இப்படி இரண்டு நாட்களில் தமிழகத்தில் 8 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒருவர் சென்னையில் பலியாகி உள்ளார். இன்று சென்னையில் 54 வயது நிரம்பிய பெண் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு பலியானார். ஸ்டான்லி மருத்துவமனையில் பலியான இவர் சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையும் சேர்த்து தமிழகத்தில் ஒன்று பேர் பலியாகி உள்ளனர் .

என்ன ஒற்றுமை

என்ன ஒற்றுமை

தமிழகத்தில் இப்படி பலியாகும் நபர்களுக்கு இடையே முக்கியமான ஒற்றுமை உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல்நாள் பலியான 4 பேரில் எல்லோரும் 50+ வயதை கடந்தவர்கள். அதில் 3 பேர் 80+ வயதை தாண்டியவர்கள். நேற்று பலியான நபர்களில் இரண்டு பேர் 50+ வயதை கடந்தவர்கள். 2 பேர் 70 வயதை கடந்தவர்கள். இன்று காலை பலியான நபர் 50+ வயதை தாண்டியவர்.

அதிக வயது பலி

அதிக வயது பலி

இதன் மூலம் தமிழகத்தில் 50+ வயதை கடந்தவர்கள்தான் இப்படி திடீர் என்று பலியாகிறார்கள். அதேபோல் கடந்த மூன்று நாட்களில் பலியான 9 பேரில் 7 பேர் பெண்கள். இவர்கள் எல்லோரும் வயதான பெண்கள். இதில் 4 பேர் மூதாட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்கள் இப்படி திடீர் என்று அதிகமாக பலியாவது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. உலகம் முழுக்க பெண்கள் கொரோனாவிற்கு குறைவாக பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது,.

உடல்நிலை மோசம்

உடல்நிலை மோசம்

இப்படி பலியான ஒன்பது பேருக்கும் உடல்நிலை மிக மோசமாக இருந்துள்ளது. ஏற்கனவே இருதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனால்தான் கொரோனா சிகிச்சை மிக சிறப்பாக அளிக்கப்பட்டும் கூட இவர்கள் பலியாகி உள்ளனர். இவர்களின் மரணத்திற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்கிறார்கள்.

English summary
Coronavirus: 9 Deaths in 3 days in Tamilnadu, An Important Common things between them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X