தூய்மை பணியாளர்கள் முக்கியம்.. கோடம்பாக்கத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவிய அதிமுக செயலாளர்
சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராம் பல்வேறு உதவி பணிகளை செய்தார்.
சென்னை: சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராம் பல்வேறு உதவி பணிகளை செய்தார்.
Recommended Video
கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொடர் லாக் டவுன் காரணமாக மக்கள் பலர் கடுமையாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். அடிப்படை வசதி இல்லமால் லாக் டவுன் காரணமாக கஷ்டப்படும் மக்களுக்கு தமிழகம் முழுக்க உதவிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் அதிமுகவினர் சார்பாக இன்று உதவி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதிமுகவின் அமைப்பு செயலாளரும், தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ஆதி ராஜாராம் இந்த உதவி பணிகளை செய்தார்.

சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் தூய்மை பணிகளை செய்யும் 200க்கும் அதிகமான தூய்மை பணியாளர்களுக்கு இவர் உதவிகளை செய்தார். இவர்களுக்கு இலவசமாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். அதேபோல் காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி உதவினார்கள்.

தன்னலமற்ற துணிச்சலான அவர்களின் பணிகளை பாராட்டும் வகையில் இந்த உதவிகளை செய்தனர். அதிமுக நிர்வாகி லோகேஷ் இந்த பணிகளை முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications