முஸ்லிம்னா மனுஷங்க இல்லையா சார்.. டாக்டர்கள் மீது எச்சில் துப்பலாமா.. எச்.ராஜா டிவிட்டரில் வாதம்!

டாக்டர்கள் மீது எச்சில் துப்பலாமா என்று கேள்வி எழுப்பி எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்களின் அராஜக செயல் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு டிவீட் போட.. அதையடுத்து கடுமையான வாக்குவாதம் மூண்டுள்ளது அவரது டிவிட்டரில்.
"அப்போ முஸ்லிம்னா மனுஷங்க இல்லையா சார்... கொரோனாவுக்கு இந்து முஸ்லிம் கிறிஸ்துவன் தெரியாது சார்" என்று ஒரு ட்விட்டர்வாசி பதிவிடவும், "செல்ல சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடலாமா? டாக்டர்களை அடிக்கலாமா? அவர்கள் மீது எச்சில் துப்பலாமா? நான் மதம் பார்க்க வில்லை.. அராஜக செயலை கண்டிக்கிறேன்." என்று எச்.ராஜா பதிலளித்துள்ளார்.

Recommended Video

    இரவு 9 மணிக்கு விளக்கேற்ற சொல்வது இதனால் தான் - எச். ராஜா விளக்கம்

    உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 53 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே டெல்லி நிஜாமுதினில் இஸ்லாமிய சமூகத்தினர் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற தப்லிக் ஜமாத் மாநாடு சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

    பங்கேற்பு

    பங்கேற்பு

    ஏராளமான நாட்டை சேர்ந்தோர் இதில் கலந்து கொண்டனர்.. அதுபோலவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது... இதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.. அறிகுறி, தொற்று உள்ள பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.

    காலனி

    காலனி

    நேற்று முன்தினம் மசூதியில் தங்கி இருந்த 167 தப்லீஜ் ஜமாத் அமைப்பினர் துக்ளகாபாத் பகுதியிலுள்ள ரயில்வே காலனியில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.. அந்த ரயில்வே காலனியில் உள்ளவர்கள் இதன்மூலம் தங்களுக்கும் கொரோனா பரவிவிடும் என்று பயந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சொன்னார்கள்.

     பரிசோதனை

    பரிசோதனை

    இதற்கிடையில் உ.பியில் தனிமை வார்டுகளில் இருப்பவர்கள் டாக்டர்கள் மீதும், நர்ஸ்கள் மீதும் எச்சில் துப்பியதாக சொல்லப்படுகிறது.. பரிசோதனை செய்ய விடாமல் மருத்துவ ஊழியர்களை அநாகரீகமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.. இந் நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    ஊழியர்கள்

    அதில் "தமிழகத்தில் 309 கொரோனா+ கேஸ்ல 264 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் என்பது அரசின் அதிகார பூர்வ தகவல்.100க் கணக்கான நபர்கள் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடலாமா? பரிசோதனைக்கு அழைக்கும் சுகாதார ஊழியரிடம் மோடிக்கு சோதனை செய் என்று பேசலாமா? இவைகள் தீம் செயல்கள்" என்று பதிவிட்டார்.

     சரக்கு மிடுக்கு

    சரக்கு மிடுக்கு

    இதையடுத்து மற்றொரு ட்வீட்டில், "இதை கண்டித்ததால் உடனே என்னை மதவாதி என்பார்கள். நோய்க்கு மதமில்லை உபதேசம் வரும். சரக்கு மிடுக்கு புகழ் பேச்சுக்கு சொந்தக்காரர் குமுறுவார்" என்று பதிவிட்டார்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இந்த 2 ட்வீட்களை பார்த்த ஒரு ட்விட்டர்வாசி, "இந்த நேரத்திலும் மத அரசியல் தேவையா? ஒரு மாநாடு நடைபெறுகிறது வெளிநாட்டு நபர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் ஒரு கண்காணிப்பு இல்லாமல் இருந்து விட்டு... மார்ச் 11இல் உலக நாடுகள் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கும் நேரத்தில் அலட்சியமாக மத்திய அரசு இருக்கலாமா? பி.கு:நான் கடவுள் பக்தி உள்ளவன்" என்று கேள்வி எழுப்பினர்.

    இந்தியா

    இந்த கேள்விக்கு எச்.ராஜா பதில் சொல்லும்போது, "இந்திய அரசு சரியான நடவடிக்கைகள் எடுத்ததால் தான் உலகிலேயே மிகக்குறைந்த பாதிப்பு உள்ள நாடாக இந்தியா உள்ளது.மேலும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட309 பேரில் 264 பேர் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிகாரபூர்வ தகவல். இவர்கள் நடவடிக்கை கண்டனத்திற்கு உரியது‌. அகம்பாவத்தை ஆதரிக்காதீர்கள்" என்றார்.

    துப்பலாமா?

    அதற்கு இன்னொரு ட்விட்டர்வாசி, "அப்போ முஸ்லிம்னா மனுஷங்க இல்லையா சார்... கொரோனா மனுஷனுக்கு வர்ற நோய். அதுக்கு இந்து முஸ்லிம் கிறிஸ்துவன் தெரியாது சார்" என்று பதிவிடவும், இதற்கும் எச்.ராஜா பதிலளித்துள்ளார். அதில், "100% உண்மை. ஆனால் இவர்களது செயல்பாடு கண்டனத்திற்கு உரியதா இல்லையா.செல்ல சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடலாமா? மருத்துவர்களை அடிக்கலாமா? தங்களை காப்பாற்றும் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பலாமா? நான் மதம் பார்க்க வில்லை இவர்களின் அராஜக செயலை கண்டிக்கிறேன். நீங்களும் கண்டிக்க வேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

    இதுபோன்ற தேவையில்லாத வெட்டிச் சண்டைகள் ஓய்வதற்காகவாவது இந்த கொரோனா நம்ம நாட்டை வேகமாக அழிந்தொழிய வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+