முதலில் 22 தான்.. இப்போது 60.. உலகின் மிக கொடூரமான வைரஸாக உருவெடுத்த கொரோனா.. என்ன நடந்தது?
உலகம் முழுக்க இருக்கும் 60 முக்கிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் பரவி இருக்கிறது.
சென்னை: உலகம் முழுக்க இருக்கும் 60 முக்கிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் பரவி இருக்கிறது. எதிர்பார்க்க முடியாத வேகத்தில் இந்த வைரஸ் பரவி வருகிறது.
கொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது.இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்கு பரவும்.
கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2835 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 79251 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஜப்பான்
அதன்படி ஜப்பான், ஆசியாவின் பல முக்கிய நாடுகள். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள். மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் என்று பல நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சுவீடன், ஜெர்மனி, நார்வே, குரேஷியா ஆகிய நாடுகளுக்கு இந்த வைரஸ் புதிதாக பரவி உள்ளது. சுவீடனில் இந்த வைரஸ் 12 பேருக்கு பரவி உள்ளது. ஜெர்மனியில் 66 பேருக்கு பரவி உள்ளது.

நார்வே எப்படி
நார்வேயில் 8 பேருக்கு பரவி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தம் 7 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதில் குவைத்தில்தான் இந்த வைரஸ் அதிக பேருக்கு பரவி உள்ளது. குவைத்தில் மொத்தம் 45 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இது போக தென் கொரியாவில் இந்த வைரஸ் நேற்று மட்டும் புதிதாக 200 பேருக்கு பரவி உள்ளது. இதன் மூலம் அங்கு வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3736 ஆக உயர்ந்துள்ளது.

மெக்சிகோ எப்படி
அதேபோல் தற்போது புதிதாக மெக்சிகோவில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இத்தாலி, ஈரான், ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்பெயின், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, தைவான், மலேசியா, சுவிட்சர்லாந்து., கனடா, வியட்நாம், நார்வே, ஆஸ்திரியா, இஸ்ரேல், லெபனான், நெதர்லாந்து, ஓமன், கிரீஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

வேறு எங்கு
இன்னொரு பக்கம் டென்மார்க், ஜார்ஜியா, ரோமானியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், அல்ஜீரிய, பிரேசில், ஈகுவாடர், ஐஸ்லாந்து, நியூசிலாந்து , நைஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கும் வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரஸ் இப்படி வேகமாக பரவி வருவதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.உலகம் முழுக்க இன்னும் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்கிறார்கள். முதலில் 22 நாடுகளில் மட்டுமே பரவிய வைரஸ் தற்போது உலகம் முழுக்க இருக்கும் 60 முக்கிய நாடுகளுக்கு ஒரே வாரத்தில் பரவி இருக்கிறது.

மொத்தமாக பயணம்
உலகம் முழுக்க பல லட்சம் பேரிடம் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் மொத்தமாக இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாது. பல ஏழை நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளதால் அதை கட்டுப்படுத்த முடியாது. பணக்கார நாடுகள் கூட இதை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதால், ஏழை நாடுகள் இதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. இதனால் இப்போதைக்கு இந்த வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்கிறார்கள்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications