தமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. பாதித்தவர்களைவிட மீண்டவர்கள் அதிகம்.. இன்றைய கொரோனா நிலவரம்
சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2516 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே மாதம் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துவிட்டது. உயிரிழப்பும் பெரிய அளவில் இல்லை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை
25,44,870 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2516 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24,86,192 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,862 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக 25 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது . தமிழகத்தில் நேற்று 25526 ஆக இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 24 816 ஆக குறைந்தது.

எவ்வளவு
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 177 பேரும். ஈரோட்டில் 135 பேரும், சென்னையில் 130 பேரும், சேலத்தில் 110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2293 பேர் உள்ளனர். சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், திருச்சியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications