உருவானது "டெல்டா +" கொரோனா.. வேகமாக உருமாற்றம் அடையும் B.1.617.2 .. எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை வைரஸான டெல்டா வகை கொரோனா உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா வகை உருமாற்றம் அடைந்து டெல்டா + வகை கொரோனா உருவாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தோன்றிய காலத்தில் இருந்து தொடர்ந்து அது உருமாற்றம் அடைந்து வருகிறது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா ஒருவரின் உடலில் இருந்து இன்னொருவரின் உடலுக்கு செல்லும் போது ஏற்படும் மாற்றம் ஆகும்.

கொரோனா வைரஸ் இப்படி பல்வேறு ஸ்டிரெயின்களாக மாறி மியூட்டேஷன் அடைந்து கொண்டு வருகிறது. சமயங்களில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரோட்டீன், அதன் ஆர்என்ஏ என்று ஒவ்வொரு விஷயமும் மியூட்டேஷனின் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் மேலும் வலிமையடைய வாய்ப்புள்ளது.

பல வகை

பல வகை

தற்போது மக்களிடையே பரவி வரும் பல்வேறு வகை கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் அதிகம் பரவி வரும், அல்லது அந்த நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகைகளுக்கு கிரேக்க பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகையான B.1.617.2 விற்கு டெல்டா வகை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டெல்டா

டெல்டா

இந்த டெல்டா வகை கொரோனா பிரிட்டன் போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. டெல்டா வகை மிகவும் ஆபத்தானது, வேகமாக பரவ கூடியது, அதிக மரணங்களை ஏற்படுத்த கூடியது என்பதால் இந்த டெல்டா மோசமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா வகை மேலும் உருமாற்றம் அடைந்து அது டெல்டா+வாக உருமாற்றம் அடைந்துள்ளது என்று இங்கிலாந்து மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்தின் பொது சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, B.1.617.2 வகை உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 மாற்றம் அடைந்துள்ளது. AY.1 வகை என்று அழைக்கப்படும் இந்த வகையை டெல்டா + என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த டெல்டா வகை கொரோனாவின் 417 ஸ்பைக் புரோட்டின் ஜீனோம் "கே" வகை "என்" என்று மாறியுள்ளது. இதை K417N மாற்றம் என்று அழைப்பார்கள்.

Recommended Video

    Wuhan lab மர்மம்.. வெளியான அமெரிக்க ஆய்வாளர்களின் ரகசிய அறிக்கை
     K417N மாற்றம்

    K417N மாற்றம்

    K417N மாற்றம் காரணமாக B.1.617.2 வகை கொரோனா B.1.617.2.1 வகையாக மாற்றம் அடைந்துள்ளது. இதுதான் டெல்டா + வகை கொரோனா என்று அழைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் டெல்டா + கொஞ்சம் கொஞ்சமாக பரவ தொடங்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிலும் டெல்டா + பெரிய அளவில் பரவாயில்லை என்றாலும் 6 பேருக்கு டெல்டா + வகை கண்டறியப்பட்டுள்ளது.

    எஸ்கேப்

    எஸ்கேப்

    டெல்டா + வகை கொரோனா இம்யூன் எஸ்கேப் கொண்டதாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதாவது கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகளால் இது குணப்படுத்தப்படாமல் போகலாம். அதேபோல் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் காக்டெயில் கொரோனா மருந்துகள் கூட டெல்டா + வகை கொரோனாவிற்கு எதிராக பலன் அளிக்காமல் போகலாம் என்று டெல்லி IGIB மருத்துவர் டாக்டர் வினோத் தெரிவித்துள்ளார்.

    எங்கே

    எங்கே

    ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் டெல்டா + வகை கொரோனா பரவி வருகிறது. இதனால் இது முதலில் எங்கு கண்டறியப்பட்டது என்று கூற முடியாது. டெல்டா + வகை கொரோனா கனடா, ரஷ்யா, ஜெர்மனி, நேபால், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் பீட்டா வகை கொரோனாவிலும் K417N மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+